இந்தியா- பாகிஸ்தான் ஒருநாள் போட்டி: கடகடவென மருத்துவமனையில் ரூம் புக் செய்யும் ரசிகர்கள்
இந்தியாவில் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் விளையாட உள்ளதால், மருத்துவமனையில் ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு ரூம் புக் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடர்
இந்த முறை உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் மாதம் தொடங்குகிறது. இந்தியா அணியும், பாகிஸ்தான் அணியும் அக்டோபர் மாதம் 15ம் அகமதாபாத்தில் மோத உள்ளது.
இதற்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது. இந்த அட்டவணை வெளியானதிலிருந்தே ரசிகர்கள் அகமதாபாத்தில் உள்ள ஓட்டல்களில் ரூம் புக் செய்து வருகிறார்கள்.
வெறும் 1000 ரூபாய் ரூம் வாடகை ஒரு நாளைக்கு 20 ஆயிரம் வரையும், வெறும் ரூ.5 ஆயிரம் ரூம் வாடகை ஒருநாளைகுகு ரூ.40 ஆயிரம் என்று பல மடங்கு உயர்ந்துள்ளது.
இதையும் பாராமல் ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு ரூமை புக் செய்து வருகிறார்கள். அந்த நாட்களில் மட்டும் எந்த ஓட்டல்களிலும் ரூம் காலியாக இல்லை.
நட்சத்திர ஒட்டல்களிலும் இதே நிலைதான் உள்ளது. ரூ.1 லட்சம் வரை கூட கட்டணம் கொடுத்து ரூமை ரசிகர்கள் புக் செய்து வருகிறார்கள்.
மருத்துவமனையில் ரூம் புக் செய்யும் ரசிகர்கள்
இந்நிலையில், அனைத்து ஓட்டல்களில் உள்ள ரூம்கள் புக் செய்யப்பட்டுவிட்டதால், ரசிகர்கள் தற்போது தனியார் மருத்துவமனையில் தங்குவதற்கு படுக்கை கட்டணங்களை குறித்து தகவல் சேகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, 48 மணி நேரம் வரை தங்குவதற்கு தனியார் மருத்துவமனைகளில் எவ்வளவு கட்டணம் என்று விசாரித்து வருகிறார்களாம். பணத்தை மிச்சப்படுத்தும் நோக்கிலும், அப்படி உடல் முழுமையாக பரிசோதித்துக் கொள்ளவும் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கையில், நோயாளிகளின் நலன்தான் எங்களுக்கு முக்கியம் என்றும், இதுபோன்று வரும் விசாரணைகள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |