பாகிஸ்தானை புரட்டிப்போட்ட கனமழை! இதுவரை 937 பேர் பலியானதாக தகவல்..அவசரநிலை பிரகடனம்
வெளிநாடுகளில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் நன்கொடை அளிக்க வேண்டும் என பாகிஸ்தான் அரசு வேண்டுகோள்
பாகிஸ்தானில் 2010ஆம் ஆண்டு ஏற்பட்ட அழிவை விட தற்போது மேலும் நிலைமை மோசமாக உள்ளதாக தகவல்
பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, தேசிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு பேரிடியாக, தற்போது பெய்து வரும் கனமழை அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் இந்த கனமழையால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்தும் என ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த சூன் மாதம் ஆரம்பித்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர்.
AP Photo
இந்த நிலையில் இரண்டரை மாத காலத்தில் இதுவரை 937 பேர் கனமழையால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சிந்துவில் 306 பேரும், பலுசிஸ்தானில் 234 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசுரத்தனமான கனமழையால் மீட்புப் படையினர் திணறி வருகின்றனர். இதன் காரணமாக பாகிஸ்தானில் தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. சேதங்களை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reuters
காலநிலை அமைச்சர் ஷெர்ரி ரெஹ்மான் கூறுகையில், 'இடைவிடாத கனமழையால் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வது கடினமாகியுள்ளது. குறிப்பாக ஹெலிகாப்டர், விமானங்களில் கூட சென்று பார்வையிட முடியாது சூழல் உருவாகியுள்ளது. பொதுவாக நாட்டில் மூன்று முதல் நான்கு சுழற்சிகள் மட்டுமே பருவமழை பெய்யும். ஆனால் தற்போது 8வது சுழற்சியை கடந்து செல்கிறது' என தெரிவித்துள்ளார்.
AP
Shahid Saeed Mirza/AFP