இறுகும் நெருக்கடி... இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றிய பாகிஸ்தான்
டெல்லியில் அமைந்துள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் பணியமர்த்தப்பட்ட பாகிஸ்தான் தூதரை இந்தியா ஏற்றுக்கொள்ள முடியாத நபராக அறிவித்து, 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது.
பதிலடி நடவடிக்கையாக
ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து அதிகரித்த பதட்டங்கள் மற்றும் எல்லையைத் தாண்டி இந்தியாவின் இராணுவத்தின் பதிலடியைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் வெளிவிவகரா அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இந்தியாவில் தனது உத்தியோகப்பூர்வ அந்தஸ்துக்கு முரணான செயல்களில் ஈடுபட்டதற்காக,
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் பணிபுரியும் ஒரு பாகிஸ்தான் அதிகாரியை இந்திய அரசு ஏற்றுக்கொள்ள முடியாத நபர் என்று அறிவித்துள்ளது. அந்த அதிகாரி 24 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் துணை தூதருக்கு இன்று இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், சில மணி நேரங்களுக்குப் பிறகு, பதிலடி நடவடிக்கையாக, எதிர்பார்த்தபடி இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலய ஊழியரை பாகிஸ்தான் வெளியேற்றியுள்ளது.
மட்டுமின்றி, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஊழியர் ஒருவர், தனது அந்தஸ்துக்கு பொருந்தாத செயல்களில் ஈடுபட்டதற்காக, அவரை பாகிஸ்தான் அரசு ஏற்றுக்கொள்ள முடியாத நபராக அறிவித்துள்ளது.
தொடர்புடைய அதிகாரி 24 மணி நேரத்திற்குள் பாகிஸ்தானை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
26 பொதுமக்கள்
இந்தியாவின் பெரிய அளவிலான எல்லை தாண்டிய நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவும் பாகிஸ்தானும் மே 10 அன்று போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்த வெளியேற்றம் நிகழ்ந்துள்ளது.
சிந்தூர் நடவடிக்கையானது பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து, ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக தொடங்கப்பட்டது, காஷ்மீரின் பைசரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளால் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இதனிடையே, பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தானின் மூத்த தூதர் சாத் அகமது வாராய்ச்சை அழைத்து, ஏப்ரல் 22 அன்று பாகிஸ்தானின் இராணுவ தூதர்களை அங்கீகரிக்கப்படாத நபர்கள் என்று அறிவிக்கும் முறையான குறிப்பை வழங்கியது.
ஏற்றுக்கொள்ள முடியாத நபர் அல்லது persona non grata என்றால் என்ன? persona non grata என்பது ஒரு லத்தீன் சொல்லாடலாகும், இதன் பொருள் ஏற்றுக்கொள்ள முடியாத நபர்.
தூதரக விவகார அடிப்படையில், ஒரு நாட்டில் இனி குறிப்பிட்ட அதிகாரியின் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை குறிக்கிறது. மட்டுமின்றி, இது தூதரக உறவுகளில் மிகவும் கடுமையான நடவடிக்கை வடிவங்களில் ஒன்றாகும், மேலும் இது பெரும்பாலும் உடனடி வெளியேற்றத்திற்கு வழிவகுக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |