இந்திய மாநிலத்தில் கிடந்த பாகிஸ்தான் கொடி! சந்தேகத்தில் பொலிசார்
இந்திய மாநிலம், பஞ்சாபில் உள்ள ஒரு கிராமத்தில் வண்ண பலூன்களுடன் பாகிஸ்தான் கொடி கிடந்தது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பாகிஸ்தான் கொடி
பஞ்சாப் மாநிலம், டார்ன் தரன் மாவட்டத்தில் ஷாபாஸ்பூர் கிராமம் உள்ளது. அங்குள்ள ரிசார்ட் அருகே 2 டஜன் வண்ண பலூன்களுடன் பாகிஸ்தான் கொடி கிடந்துள்ளது.
இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து சதர் காவல் நிலையத்திற்கு சென்று தகவல் அளித்துள்ளனர்.
பின்னர், ஷாபாஸ்பூர் கிராமத்திற்கு விரைந்து வந்த பொலிசார் வண்ண பலூன்களுடன் கிடந்த பாகிஸ்தான் கொடியைக் கைப்பற்றி விசாரணை நடத்த ஆரம்பித்தனர்.
இம்ரான் கானின் கட்சிக் கொடியா?
பஞ்சாபில் கிடந்த இந்த பாகிஸ்தான் கொடியில் பிடிஐ (PTI) என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் தலைவர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (pakistan tehreek-e-insaf) கட்சியை சேர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், கொடியின் இருபுறத்திலும் வண்ணபலூன்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கொடியானது பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு பறந்து வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, இதுகுறித்த விசாரணையை பொலிசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |