நீதிமன்ற வளாகத்தில் சுற்றி வளைத்த ராணுவத்தினர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான்(imran khan) ராணுவத்தினரை இழிவாக பேசிய குற்றசாட்டில், கைது செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இம்ரான்கான் மீது வழக்கு
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த இம்ரான்கான் அரசியல்வாதியாக உருவெடுத்தார். இவர் தெஹ்ரீக்-இன். இன்சாப் என்ற கட்சியை தொடங்கி 2018ஆம் ஆண்டு பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிட்டு பிரதமரானார்.
@ani
இந்நிலையில் இம்ரான்கானுக்கு எதிராகவும், அவரது ஆட்சியை கவிழ்ப்பதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தனர்.
மேலும் பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக, இம்ரான்கான் அரசு பதவி விலக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி அவர் பதவி இழந்தார்.
திடீரென கைது
இதனை தொடர்ந்து பதவி இழந்த இம்ரான் கானை கைது செய்ய, பல முயற்சிகள் தொடர்ந்து ஆளும் அரசினால் எடுக்கப்பட்டன. இவர் மீது தொடுக்கப்பட்ட ஊழல் வழக்கின் படி அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
#WATCH | "Pakistan Rangers abducted PTI Chairman Imran Khan," tweets Pakistan Tehreek-e-Insaf (PTI)
— ANI (@ANI) May 9, 2023
(Video source: PTI's Twitter handle) pic.twitter.com/ikAS2Pxlpw
அப்போது அவரது கட்சியினர் எதிராக குரல் கொடுத்ததாலும், இம்ரான்கான் தப்பி சென்றதாலும் கைது செய்யப்படவில்லை. இதனிடையே இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக வந்த இம்ரான்கான் இன்று வருகை தந்தார்.
@twitter
இந்நிலையில் அங்கு குவிக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை மூலம் இம்ரான்கான், ராணுவத்தினரனை இழிவாக பேசிய குற்றசாட்டுக்காக அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரது கைது நடவடிக்கையை தடுக்க முயன்ற வழக்கறிஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.
@twitter
இதனை தொடர்ந்து திடீரென இம்ரான் கான் மீதான கைது நடவடிக்கை, பாகிஸ்தான் மக்களிடையே பெரும் அதிர்வலையை கிளம்பியுள்ளது.