இலவச கோதுமை மாவுக்காக முண்டியடித்த கூட்டம் - நெரிசல் சிக்கி இருவர் பலி...!
பாகிஸ்தானில் இலவச கோதுமை மாவுக்காக முண்டியடித்த கூட்டத்தால் நெரிசல் ஏற்பட்டு இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கூட்ட நெரிசல் சிக்கி இருவர் பலி
பாகிஸ்தான் சாஹிவாலில் மக்களுக்காக இலவச மாவு வழங்கப்பட்டது. அப்போது, அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த கூட்டத்தில் ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் திரண்டனர். கொஞ்ச நேரத்தில் பெண்கள் வரிசையில் நிற்காமல் கோதுமை மாவு வாங்குவதற்காக முண்டியடித்தனர்.
இதனால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும் 46 பேர் காயமடைந்தனர். இலவச மாவு கேட்கும் கூட்டத்தை கலைக்க போலீசார் அங்கு தடியடி நடத்தினர்.
இதேபோல், ரஹீம் யார் கானில் இலவச மாவு வழங்கும்போது, மற்றொரு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இங்கு 73 வயது முதியவர் ஒருவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர்.