ஆபரேஷன் சிந்தூரில் அமெரிக்காவின் ஆதரவு கேட்கப்பட்டதா? பாகிஸ்தான் அமைச்சர் விளக்கம்
ஆபரேஷனில் சிந்தூர் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர்
கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி நடைபெற்ற பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மே 7 ஆம் திகதி ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை, இந்தியா பாகிஸ்தானில் மேற்கொண்டது.
இதில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் தாக்கியழிக்கப்பட்டது. இதன் காரணமாக, இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இரு நாடுகளும், ட்ரோன் மற்றும் விமானங்கள் மூலமாக தாக்கிக்கொண்டன.
4 நாட்களுக்கு இந்த போர் பதற்றம் நீடித்த நிலையில், மே 10 ஆம் திகதி போர் நிறுத்தம் செய்வதாக இரு நாடுகளும் அறிவித்தன.
தன்னுடைய மத்தியஸ்தம் காரணமாகவே இந்த போர் நிறுத்தம் நடைபெற்றது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
பாகிஸ்தான் அமைச்சர் விளக்கம்
பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதாலே போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டோம், இதில் மூன்றாம் நாடுகளின் தலையீடு இல்லை என டிரம்பின் கூற்றை இந்தியா மறுத்து வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானும் டிரம்ப்பின் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் டார், "நாங்கள் அமெரிக்கா உள்ளிட்ட எந்தவொரு நாட்டையும் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய சொல்லவில்லை. போர் நிறுத்த கோரிக்கை பாகிஸ்தானிடமிருந்தே வந்தது.
காஷ்மீர் உள்ளிட்ட நிலுவையில் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் இந்தியா உடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |