விழுந்து நொறுங்கிய பாகிஸ்தான் கடற்படை ஹெலிகாப்டர்: 3 அதிகாரிகள் பலி! வைரல் வீடியோ
பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹெலிகாப்டர் விபத்து
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் துறைமுக நகரான குவாதரில் கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
வழக்கமான பயிற்சியில் ஹெலிகாப்டர் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் கடற்படையின் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 அதிகாரிகள் மற்றும் கடற்படை மாலுமி ஒருவர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக பதவி வகித்து வரும் அன்வாருல் ஹக் காக்கர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |