பாகிஸ்தானுக்கு மூன்றே நாட்களில் 82,000 கோடி ரூபாய் இழப்பு
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பாரிய அளவில் பங்குச்சந்தையில் நட்டத்தை சந்தித்துள்ளது.
பங்குச்சந்தை
இந்தியா, பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் மூன்று நாட்களை கடந்துள்ளது. இதன் எதிரொலியாக இரு நாடுகளின் பங்குச்சந்தைகளிலும் சரிவு ஏற்பட்டது.
எனினும், நேற்றைய தினம் பாகிஸ்தானின் பங்குச்சந்தை லேசான எழுச்சி கண்டது.
இதன்மூலம் குறியீட்டு எண் கே.எஸ்.இ 799 புள்ளிகள் உயர்ந்தது. இதனால் பாகிஸ்தானின் பங்குச்சந்தை 1,04,326 புள்ளிகளில் நின்றது.
ரூ.82,000 கோடி
ஆனாலும், ஒட்டுமொத்தமாக கடந்த மூன்று நாட்களில் பாகிஸ்தானின் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ரூ.82,000 கோடி இழப்பை சந்தித்துள்ளனர்.

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி
இந்த சரிவை சமாளிக்கவே தனியாக கூட்டாளி நாடுகளிடம் பாகிஸ்தான் கடன் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |