இந்தியாவிற்கு விமான பாதைகளை மூடியதால் பல கோடிகளை இழந்த அண்டை நாடு
இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்திய ஒரு நாளுக்குப் பிறகு, ஏப்ரல் 24 ஆம் திகதி பாகிஸ்தான் இந்திய விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடியது.
இழப்புகள்
குறித்த செயலால், இரண்டு மாதங்களில் பாகிஸ்தான் 4.10 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் அதாவது இந்திய மதிப்பில் ரூ 127 கோடி இழப்பைச் சந்தித்துள்ளதாக வெள்ளிக்கிழமை அந்த நாட்டின் தேசிய சட்டமன்றத்தில் பகிரப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கோரிக்கையின்படி, இந்திய விமான நிறுவனங்களுக்குச் சொந்தமான அல்லது குத்தகைக்கு விடப்பட்ட இந்திய விமானங்களுக்கான வான்வெளி மூடப்பட்ட பின்னர், ஏப்ரல் 24 முதல் ஜூன் 30, 2025 வரை இழப்புகள் ஏற்பட்டன.
பாகிஸ்தானின் இந்த அதிரடி நகர்வால் சுமார் 100 முதல் 150 இந்திய விமானங்கள் பாதிக்கப்பட்டன. இழப்புகள் இருந்தபோதிலும், பாகிஸ்தான் விமான நிலைய ஆணையத்தின் ஒட்டுமொத்த வருவாய் 2019 இல் 508,000 டொலரிலிருந்து 2025 இல் 760,000 டொலராக அதிகரித்துள்ளது.
மேலும், வான்வெளி கட்டுப்பாடுகள் மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் வரும் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்திருந்தது.
மூடப்பட்டுள்ளது
மட்டுமின்றி, நிதி இழப்புகள் ஏற்படும் அதே வேளையில், இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவை பொருளாதாரக் கருத்தில் முன்னுரிமை பெறுகின்றன என்றும் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
2019ல், எல்லை தாண்டிய பதட்டங்கள் காரணமாக வான்வெளி மூடப்பட்ட பின்னர் பாகிஸ்தான் 54 மில்லியன் டொலர் இழப்பை சந்தித்தது. பாகிஸ்தான் வான்வெளி தற்போதும் இந்திய விமானங்களுக்கு மூடப்பட்டுள்ளது, ஆகஸ்ட் கடைசி வாரம் வரை இந்த நடவடிக்கை அமுலில் இருக்கும் என்றே கூறப்படுகிறது. இதேபோன்ற நடவடிக்கையில், இந்திய வான்வெளியும் பாகிஸ்தான் விமான சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |