பாதி உலகை சேர்த்து அழித்துவிடுவோம்! மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் ராணுவத்தளபதி..ட்ரம்ப் குறித்து கூறிய விடயம்
இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய பாகிஸ்தானின் இராணுவத் தளபதி ட்ரம்பை புகழ்ந்து தள்ளினார்.
அஸிம் முனிர்
பாகிஸ்தானின் இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷலான அஸிம் முனிர் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இது இரண்டு மாதங்களில் அவரது இரண்டாவது பயணமாகும்.
ஃபுளோரிடாவின் டம்பாவில் உள்ள பாகிஸ்தான் புலம்பெயர்ந்தோர் இடையே அவர் உரையாற்றியுள்ளார்.
அப்போது அவர், எதிர்காலத்தில் இந்தியாவுடனான போரில் தங்கள் நாடு இருத்தலியல் அச்சுறுத்தலை எதிர்கொண்டால், அணு ஆயுத அச்சுறுத்தலை விடுப்போம் என கூறியதாக கூறப்படுகிறது.
மேலும் அவர், "பாகிஸ்தானுக்கு நீர் ஓட்டத்தைத் தடுத்தால், இஸ்லாமாபாத் இந்திய உள்கட்டமைப்பை அழித்துவிடும். நாங்கள் ஒரு அணு ஆயுத நாடு. நாங்கள் வீழ்ச்சியடைகிறோம் என்று நினைத்தால், பாதி உலகத்தை எங்களுடன் சேர்த்து அழித்துவிடுவோம்" என்று எச்சரித்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ட்ரம்பிற்கு நன்றி
இதற்கிடையில், அமெரிக்கா குறித்து பேசிய முனிர், இது பாகிஸ்தான்-அமெரிக்க உறவுகளில் ஆக்கப்பூர்வமான, நிலையான உறவுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய பரிமாணத்தை தனது இரண்டாவது பயணம் குறிக்கிறது என்றார்.
அத்துடன் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பிற்கு நன்றி தெரிவித்த அவர், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரைத் தடுப்பதிலும், பிற உலகளாவிய மோதல்களைத் தடுப்பதிலும் அவரது மூலோபாயத் தலைமை வகித்தார் என பாராட்டினார்.
முனிர் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், "அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அடிபணியாது என்றும், தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்தொடர்ந்து எடுக்கும்" என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |