வாங்கிய கடனுக்கு பதிலாக பெண் குழந்தைகளை விற்கும் விவசாயிகள்: அதிர்ச்சி தகவல்
வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதற்காக பெரிய கோடீஸ்வரர்களுக்கு தங்கள் பெண் குழந்தைகளை பாகிஸ்தான் விவசாயிகள் திருமணம் செய்து வைப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வாங்கிய கடனுக்கு பதிலாக
பாகிஸ்தானில், கடனில் சிக்கிய விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பீடுகளை சரி செய்யும் விதமாக தனது சிறு வயது பெண் குழந்தைகளை பெரிய பணக்காரர்களுக்கு விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானில் ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக விவசாய நிலங்கள் நீரில் மூழ்கினர்.
இதனால் பெரும் கடன் சுமையில் சிக்கிய விவசாயிகள் தங்களது சிறுவயது மகள்களை விற்று வருவதாக தெரியவந்துள்ளது.
அந்த வகையில் கடன் சுமையை அடைப்பதற்காக தந்தை ஒருவர் தன்னுடைய 10 வயது மகளை 40 வயதுடைய நபர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
இந்த திருமணத்திற்கு ஈடாக அந்த நபர் நிறைய பணம் கொடுத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இளம் வயது திருமணம்
பாகிஸ்தானில் சிலர் இவ்வாறு 13 வயது சிறுமிகளையும், 5 வகுப்பு முடித்த சிறுமிகளையும் திருமணம் என்ற பெயரில் விற்பனை செய்து வருவதாக தெரியவந்துள்ளது.
இதனால் பாகிஸ்தான் பள்ளிகளில் 2022ம் ஆண்டு முதல் பெண் குழந்தைகளின் சேர்க்கை கணிசமாக குறைந்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |