இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு
இந்தியாவின் சக்திவாய்ந்த இராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர்க்குப் பிறகு, பாகிஸ்தான் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது.
18 சதவீதம் உயர்த்த
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பல பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ஆயுதப்படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இந்தத் துணிச்சலான நடவடிக்கையால் பாகிஸ்தான் அரசாங்கமும் இராணுவமும் பதிலடி கொடுக்கத் திணறியுள்ளதாகவே கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கையின் போது இந்தியா பல பாகிஸ்தான் விமான தளங்களையும் தாக்கியது, பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பில் உள்ள பலவீனங்களை அம்பலப்படுத்தியது.
இது பாகிஸ்தான் அரசாங்கத்தை அதன் பாதுகாப்பு செலவினங்களில் பெரிய அதிகரிப்பை பரிசீலிக்கும் முடிவிற்குத் தள்ளியுள்ளது. வரும் நிதியாண்டில் பாகிஸ்தான் தனது பாதுகாப்பு பட்ஜெட்டை 18 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியத் தாக்குதலின் போது பாகிஸ்தான் தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தவறியதற்கான நேரடி எதிர்வினையே இந்த பட்ஜெட் உயர்வு என பத்திரிகைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
கவலை கொண்டுள்ளது
2024ல் இந்தியா தனது இராணுவத்திற்காக 86.1 பில்லியன் டொலர்களை செலவிட்டது, அதே நேரத்தில் பாகிஸ்தான் 10.2 பில்லியன் டொலர்களை மட்டுமே செலவிட்டுள்ளது.
இந்த சமீபத்திய மோதல் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டங்களை அதிகரித்துள்ளது மட்டுமல்லாமல், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இந்தியா எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதையும் வெளிக்காட்டுகிறது.
மேலும், செலவை உயர்த்துவதன் மூலம் பாகிஸ்தான் தமது நிலை தொடர்பில் கவலை கொண்டுள்ளதைக் குறிக்கிறது, ஆனால் ஆபரேஷன் சிந்தூரின் விளைவுகள் இப்பகுதியில் தொடர்ந்து எதிரொலிக்கும் என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |