இந்திய அணிக்காக விளையாடிய பாகிஸ்தான் வீரருக்கு தடை! பகிரங்க மன்னிப்புடன் விளக்கம்
பாகிஸ்தான் கபடி வீரர் ஒருவர் தனியார் நிகழ்வில் இந்தியாவுடன் தொடர்புடைய அணியில் விளையாடியதற்காக தடை விதிக்கப்பட்டார்.
உபைதுல்லா ராஜ்புத்
பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற ஒரு தனியார் கபடி போட்டியில் பாகிஸ்தான் வீரர் உபைதுல்லா ராஜ்புத் (Ubaidullah Rajput) பங்கேற்றார்.

ஆனால், அவர் இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தியதாக பாகிஸ்தான் கபடி சம்மேளனம் குற்றம்சாட்டியது.
மேலும், உபைதுல்லா தடையில்லா சான்றிதழ் நெறிமுறைகளை மீறியதாகக் கூறி அவருக்கு காலவரையற்ற தடை விதித்துள்ளது.
மன்னிப்பு
சம்மேளன அதிகாரிகள், சனிக்கிழமை நடைபெற்ற அவசரக் கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. கட்டாயத் தடையில்லா சான்றிதழ் (NOC) நெறிமுறைகளை மீறியது என்றனர். அத்துடன் போட்டி சூழலில் ராஜ்புத்தின் நடத்தை குறித்த கவலைகளை குறிப்பிட்டனர்.

இதுகுறித்து பதிலளித்த உபைதுல்லா ராஜ்புத், பஹ்ரைனில் நடைபெற்ற அந்தத் தொடரில் விளையாடத் தான் அழைக்கப்பட்டதாகவும், ஒரு தனியார் அணியில் சேர்க்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் தனது செயலுக்கு மன்னிப்பு கோரியதுடன் அந்தத் தொடரின்போது அந்தத் தனியார் அணி 'இந்திய அணி' என்று வகைப்படுத்தப்படும் என்பது தொடக்கத்தில் தனக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |