IPL மற்றும் PSL சாம்பியன்களுக்கிடையே போட்டி - பாகிஸ்தான் பரிந்துரை
இந்திய கிரிக்கெட் வாரியத்தால், 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட T20 லீக் போட்டியான IPL தொடர், உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது 18வது ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
IPL க்கு கிடைத்த வரவேற்பையடுத்து, பல்வேறு நாட்டின் கிரிக்கெட் அமைப்புகள் 20 ஓவர் போட்டிகளை நடத்த தொடங்கியுள்ளது.
IPL vs PSL
அவுஸ்திரேலியா BBL தொடரையும், மேற்கிந்திய தீவுகள் CPL தொடரையும், தென் ஆப்பிரிக்கா SA20 தொடரையும், பாகிஸ்தான் PSL தொடரையும் நடத்தி வருகின்றன.
இந்திய கிரிக்கெட் வீரர்கள், IPL தவிர்த்த பிற நாடுகளின் லீக் போட்டிகளில் விளையாட பிசிசிஐ கட்டுப்பாடு விதித்துள்ளது. அதேவேளையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் விளையாடி கொள்ளலாம்.
இந்நிலையில், IPL மற்றும் PSL தொடரில் வெற்றி பெரும் அணிகளுக்கு இடையே போட்டி நடத்த வேண்டும். இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் Najam Sethi, BCCI-க்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெறும் போட்டிகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளதாகவும், இதை வேறு ஒரு பொதுவான நாட்டில் வைத்து நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக 2009 முதல் 2014 வரை IPL அணிகள், BBL அணிகள் போன்ற உள்ளூர் அணிகளுக்கிடையேன T20 போட்டி தொடரை சாம்பியன்ஸ் லீக் T20 என்ற பெயரில் தென் ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியங்களுடன் இனைந்து BCCI நடத்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |