இந்தியா தாக்கினால் பாகிஸ்தான் தாக்குப்பிடிக்குமா? வெளிவரும் தகவல்கள்
இந்திய இராணுவம் தாக்கினால் அதனை எதிர்கொள்ள போதிய வெடிபொருட்கள் பாகிஸ்தானிடம் இல்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா தாக்குதல் நடத்தினால்
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக ரத்து செய்த இந்தியா, அட்டாரி எல்லையில் ஒருங்கிணைந்த சோதனை சாவடியையும் மூடியது.
இந்த நிலையில் இந்தியா தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் அதனை எப்படி எதிர்கொள்ளும் என்ற கேள்வி பரவலாக உள்ளது. இதற்கு காரணம் பாகிஸ்தானிடம் போதிய ஆயுதங்கள் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை பாகிஸ்தானின் ஆயுத தொழிற்சாலையானது விநியோகித்து வருகிறது. ஆனால், கவச பிரிவு வாகனங்கள் மற்றும் பீரங்கி வாகனங்களுக்கு தேவையான எறிகுண்டுகள் போதிய அளவில் பாகிஸ்தான் இராணுவத்திடம் இல்லை.
எதிர்கொள்வதில் சிக்கல்
அத்துடன் எம்.109 ஹவிட்ஜர்ஸ் ரக பீரங்கிகளுக்கு வேண்டிய எறிகுண்டுகளும், பி.எம்.21 சாதனங்களுக்கு தேவையான ராக்கெட்டுகளும் போதிய அளவில் இல்லாததால், இந்தியாவின் தாக்குதலை பாகிஸ்தான் எதிர்கொள்வதில் சிக்கல் உள்ளது.
வெளி நாடுகளுக்கு ஆயுதங்களை விநியோகிக்கும் பாகிஸ்தான் உள்நாட்டு நாட்டு இராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை தருவதில்லை. குறிப்பாக, உக்ரைனுக்கு பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களை கொடுக்கும் பாகிஸ்தானின் கையிருப்பில் குறைந்த அளவே ஆயுதங்களை வைத்துள்ளது.
மேலும், வெடிபொருட்களின் பற்றாக்குறையால் பாகிஸ்தான் இராணுவம் ஒரு கட்டத்தில் அச்சமடைந்துள்ளதாகவும் சில வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனால் இந்தியா தாக்கினாலும் அதனை எதிர்கொள்ள போதிய வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் வசதி இல்லாத நாடாக பாகிஸ்தான் இருப்பதால் அதனால் தாக்குப்பிடிக்க முடியாது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |