2 நாடுகளுடன் ஒரே நேரத்தில் போருக்கு தயார் - இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான்
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுடன் ஒரே நேரத்தில் மோதலுக்கு தயார் என பாகிஸ்தான் அமைச்சர் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் தாக்குதல்
கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இரு நாடுகளும் எல்லை பகுதிகளில் மேற்கொண்ட தாக்குதலில், 50க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதனையடுத்து நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.

இந்நிலையில், நவம்பர் 11 ஆம் திகதி, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் காரில் குண்டு வெடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலின் பின்னணியில் ஆப்கானிஸ்தான் இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா உடன் மோதலுக்கு தயார் என கவாஜா ஆசிப் அறிவித்துள்ளார்.
2 நாடுகளுடனும் மோதலுக்கு தயார்
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "கிழக்கு எல்லையில் இந்தியாவையும், மேற்கு எல்லையில் ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்களையும் எதிர்த்துப் போராட பாகிஸ்தான் ராணுவம் தயாராக உள்ளது.

முதற்கட்டத்தில் அல்லாஹ் எங்களுக்கு உதவினார். 2வது கட்டத்திலும் அல்லாஹ் எங்களுக்கு உதவுவார். அவர்கள் இறுதிக்கட்டதை விரும்பினால், போரைத் தவிர வேறு வழியில்லை.
ஆப்கானிஸ்தானில் ஒன்றுபட்ட அரசாங்கம் இல்லை. உண்மையில், ஆப்கானிஸ்தான் வழியாக நம் நாட்டில் நடத்தப்படுவது இந்திய ஆக்கிரமிப்பாகும்.
பாகிஸ்தான் எந்த ஒருராணுவ நடவடிக்கையையும் தொடங்காது. ஆனால், எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் பதிலளிக்காமல் விடமாட்டோம். நாங்கள் வலுவாக பதிலடி கொடுப்போம்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |