நெருங்கும் தேர்தல்... தேசிய விமான சேவை நிறுவனத்தை விற்க முடிவு செய்த ஆசிய நாடு
பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் அடுத்த வாரம் முன்னெடுக்கப்படவிருக்கும் நிலையில், கடனில் மூழ்கியுள்ள தேசிய விமான சேவை நிறுவனத்தை விற்கும் முடிவுக்கு வந்துள்ளது அந்த நாட்டின் காபந்து அரசாங்கம்.
முடிவை முன்னெடுத்து செல்லலாம்
தேர்தலுக்கு பின்னர், புதிதாக உருவாகும் அரசாங்கம் இந்த முடிவை முன்னெடுத்து செல்லலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். கடந்த காலங்களில், தெரிவான அரசாங்கங்கள் தேசிய விமான சேவை நிறுவனமான PIA விற்பனை உட்பட சீர்திருத்தங்கள் எதையும் மேற்கொள்வதில் இருந்து விலகியிருந்தன.
@reuters
ஆனால் தற்போது கடனில் மூழ்கி தத்தளிக்கிறது பாகிஸ்தான். அத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் நஷ்டத்தில் இயங்கும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மாற்றியமைக்க ஜூன் மாதம் ஒப்புக்கொண்டது.
மேலும், சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தம் செய்து கொண்ட சில வாரங்களில் PIA நிறுவனத்தை தனியார்மயமாக்க பாகிஸ்தான் அரசாங்கம் முடிவு செய்தது.
அரசு-அரசாங்க ஒப்பந்தம்
தற்போது PIA நிறுவனம் விற்பது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் 98 சதவிகிதம் முடிவடைந்துள்ளதாகவும், அமைச்சரவை ஒப்புதல் அளித்ததும் எஞ்சிய 2 சதவிகித வேலைகள் முடிக்கப்படும் என்றார் அமைச்சர் Fawad Hasan Fawad.
@reuters
மட்டுமின்றி, PIA நிறுவனத்தை டெண்டர் மூலம் விற்கலாமா அல்லது அரசு-அரசாங்க ஒப்பந்தம் மூலம் விற்கலாமா என்பதையும் அமைச்சரவை முடிவு செய்யும் என்று ஃபவாத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |