அமெரிக்காவிற்கு முதல் Rare Earth கனிம கப்பலை அனுப்பிய பாகிஸ்தான்
பாகிஸ்தானிலிருந்து அமெரிக்காவிற்கு முதல் Rare Earth கனிம கப்பல் அனுப்பப்பட்டது.
பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையே புதிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு சார்ந்த ஒத்துழைப்புகள் தொடங்கியுள்ளது.
பாகிஸ்தான் Rare Earth Minerals என அழைக்கப்படும் மிக முக்கியமான தொழில்நுட்ப கனிமங்களைக் கொண்ட முதல் கப்பலை அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது.
இது உலகளாவிய முக்கிய கனிமங்கள் விநியோக சங்கிலியில் பாகிஸ்தானின் இடத்தை உறுதிப்படுத்தும் முக்கியமான படியாக கருதப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், US Strategic Metals (USSM) நிறுவனம் பாக்கித்தானுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கடந்த செப்டெம்பரில் கையெழுத்திட்டது.
அதன் தொடர்ச்சியாக, 500 மில்லியன் டொலர் முதலீட்டுடன் கனிமங்கள் சுத்திகரிப்பு மற்றும் மேம்பாட்டு மையங்களை பாகிஸ்தானில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கப்பலில் அனுப்பப்பட்ட கனிமங்களில் antimony, copper concentrate மற்றும் Rare Earth Elements (neodymium, praseodymium) ஆகிய கனிமங்கள் அடங்கும்.
இதன்மூலம், பாகிஸ்தானுக்கு தொழில்நுட்ப பரிமாற்றம், வேலை வாய்ப்புகள் மற்றும் பில்லியன் டொலர் வருமானம் உருவாக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
பாகிஸ்தானின் கனிம வளங்கள் சுமார் 6 டிரில்லியன் டொலர் மதிப்புடையவை என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |