இந்திய கப்பல்களுக்கு துறைமுகங்களை மூடிய பாகிஸ்தான்... தீவிரமடையும் நெருக்கடி
பஹல்காம் விவகாரத்தில் இந்தியா புதிய நடவடிக்கைகளை விதித்த சில மணி நேரங்களில், இந்திய கொடியுடன் பயணப்படும் கப்பல்கள் தங்களது துறைமுகங்களைப் பயன்படுத்துவதை பாகிஸ்தான் தடை செய்துள்ளது.
பாகிஸ்தான் துறைமுகத்திற்கும் செல்ல
பாகிஸ்தானிலிருந்து வரும் அல்லது அதன் வழியாக செல்லும் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், பாகிஸ்தான் கப்பல்கள் அதன் துறைமுகங்களுக்குள் நுழைவதற்கும் இந்தியா சனிக்கிழமை தடை விதித்தது.
மட்டுமின்றி, பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கு எதிராக உறுதியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு எந்தவொரு இந்திய கப்பல்களும் எந்த பாகிஸ்தான் துறைமுகத்திற்கும் செல்ல அனுமதிக்கப்படாது என்று அந்த நாடு உத்தரவிட்டது.
அண்டை நாட்டுடனான கடல்சார் நிலைமையின் சமீபத்திய சூழலை கருத்தில் கொண்டு, கடல்சார் இறையாண்மை, பொருளாதார நலன் மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாகிஸ்தான் பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்துகிறது.
இந்திய கொடி தாங்கிய கப்பல்கள் எந்த பாகிஸ்தான் துறைமுகத்திற்கும் செல்ல அனுமதிக்கப்படாது, பாகிஸ்தான் கொடி தாங்கிய கப்பல்கள் எந்த இந்திய துறைமுகத்திற்கும் செல்லக்கூடாது. மேலும் எந்தவொரு விலக்கு அளிக்கப்பட்டாலும் அது பரிசீலிக்கப்பட்டு வழக்கு அடிப்படையில் முடிவு செய்யப்படும்.
இறக்குமதி செய்வதற்கு தடை
ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளது.
இந்திய அரசாங்க உத்தரவின்படி, தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுக் கொள்கையின் அடிப்படையில் பாகிஸ்தானில் இருந்து அனைத்துப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணி தீவிரமடைந்த நிலையில், படுகொலையுடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபர் விமானத்தில் இருக்கலாம் என்ற ரகசியத் தகவலை அடுத்து, சென்னையில் இருந்து கொழும்புக்கு சென்ற விமானத்தில் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்ததாக இலங்கை காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் இலங்கை தலைநகரில் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் படுகொலைக்குப் பின்னால் இரண்டு பாகிஸ்தானியர்கள் உட்பட நான்கு பயங்கரவாதிகளை இந்திய அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |