பாகிஸ்தானின் தைமூர் ஏவுகணை சோதனை வெற்றி., இந்தியாவிற்கு புதிய சவால்
பாகிஸ்தான் கடற்படை, தன்னிச்சையாக உருவாக்கிய தைமூர் (Taimoor) எனப்படும் ALCM ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
இந்த ஏவுகணையானது, விமானம் மூலம் ஏவப்படும் கப்பல் எதிர்ப்பு க்ரூஸ் ஏவுகணை (Air-Launched Cruise Missile) ஆகும்.
தைமூர் ஏவுகணை 600 கி.மீ. தூரம் வரை நிலம் மற்றும் கடல் இலக்குகளை தாக்கும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.
ஏப்ரல் 21 அன்று நடைபெற்ற இந்த சோதனை, பாகிஸ்தானின் கடற்படை திறனை உயர்த்தும் என கருதப்படுகிறது.

Inter-Services Public Relations (ISPR) வெளியிட்ட அறிக்கையில், “இது பாகிஸ்தான் கடற்படையின் துல்லியமான தாக்குதல் திறனை நிரூபிக்கும் சக்திவாய்ந்த சோதனை” எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த சோதனை, பாகிஸ்தான் கடற்படையின் தூரத்திலிருந்து தாக்கும் திறனை (stand-off capability) வலுப்படுத்துகிறது. இதனால் எதிரி கடற்படை அணிவகுப்புகளை, பாகிஸ்தான் விமானங்கள் தங்கள் வான்வெளிக்குள் இருந்தபடியே தாக்கும் திறன் பெறுகின்றன.

இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக அமைந்தது, இந்தியாவிற்கு சற்று கவலைக்குரிய செய்தியாக பார்க்கப்படுகிறது. இந்திய கடற்படை, அரபிக்கடலில் விமானம் தாங்கி கப்பல்கள், destroyers, frigates மற்றும் BrahMos ஏவுகணைகள் மூலம் மேலாதிக்கம் செலுத்தி வந்தது.
ஆனால் பாகிஸ்தானின் புதிய ஏவுகணை சோதனை, எதிர்கால கடற்படை மோதல்களை மேலும் சிக்கலாக்கும் அபாயத்தை உருவாக்குகிறது.
BrahMos ஏவுகணை Mach 2.8 முதல் 3 வேகத்தில் 450 முதல் 800 கி.மீ. தூரம் வரை தாக்கும் திறன் கொண்டது.
அதேசமயம், பாகிஸ்தானின் Taimoor ஏவுகணை 600 கி.மீ. தூரம் வரை தாக்கும் திறன் பெற்றிருப்பது, இந்திய கடற்படைக்கு கூடுதல் கண்காணிப்பு, விமானக் காவல் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |