தண்ணீர் பிரச்சினையில் இந்தியா மீது போர் தொடுப்போம் - பாகிஸ்தான் மிரட்டல்
இந்தியாவிற்கு எதிராக போருக்கு செல்வோம் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மீது போர் தொடுப்போம்
கடந்த ஆண்டு நடைபெற்ற பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு ராஜதந்திர நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே, சிந்து நதி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக உருவாக்கப்பட்ட ஒப்பந்தமே சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஆகும்.
சிந்து நதி நீர் பாகிஸ்தான் நாட்டின் முக்கிய ஆதாரம் ஆகும். அந்நாட்டில் உள்ள 16 மில்லியன் ஹெக்டேர், அதாவது 90% விவசாய நிலங்கள் சிந்து நதி நீரையே நம்பியுள்ளது.
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ்
இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தினால், பாகிஸ்தானின் உணவு உற்பத்தி பாதிக்கப்படும். மேலும் குடிநீர் உட்பட அடிப்படை நீர் தேவைகள் பாதிக்கப்படும். நீர் மின் திட்டங்களுக்கான, தடையற்ற நீர் சேவையையும் சிந்து நதியில் இருந்து தான் கிடைக்கிறது.
இந்நிலையில், ஏற்கனவே உள்நாட்டு நிர்வாக சீர்கேட்டால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அரசு, தற்போது கடுமையான நீர் தட்டுப்பாட்டையும் எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில், நீர் விவகாரம் குறித்து பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப் இந்தியா மீது போர் தொடுப்போம் என மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "தண்ணீரும் எங்கள் தேசியப் பாதுகாப்பின் ஒருபகுதிதான். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நாங்கள் உணரும் தருணத்தில், நிச்சயமாக இந்தியாவுக்கு எதிராகப் போருக்குச் செல்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |