ஈரான் போர்... பாகிஸ்தானில் நான்கு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் ஆலோசனை
சவுதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், மத்திய கிழக்கில் நிலவும் போர் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இஸ்லாமாபாத்தில் சந்திக்கவுள்ளனர்.
தணிப்பதற்கான முயற்சிகள்
பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் இஷாக் தார் அழைப்பின் பேரில் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் பாகிஸ்தான் தலைநகரில் சந்திக்க உள்ளனர்.

இச்சந்திப்பின் போது, பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிப்பதற்கான முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து வெளிவிவகார அமைச்சர்கள் விரிவான கலந்தாய்வுகளை மேற்கொள்வார்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மூன்று நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்ஃபையும் சந்திக்க உள்ளனர். எகிப்தின் வெளிவிவகார அமைச்சர் பத்ர் அப்தெலாட்டி, பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களைச் சந்தித்து,
பிராந்திய பதற்றத் தணிப்பது குறித்து விவாதிப்பதற்காக பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக எகிப்தின் வெளிவிவகார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஒரு மத்தியஸ்தராக
இதனிடையே, இந்த நான்கு தரப்புச் சந்திப்பு திங்களன்று நடைபெறும் என்றும், பிரதிநிதிக் குழுக்கள் ஞாயிறு மாலைக்குள் பாகிஸ்தானை வந்தடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
போர் நீடித்து வரும் நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு தரப்பினருக்கும் இடையிலான செய்திகளைப் பரிமாறிக்கொள்ளும் ஒரு மத்தியஸ்தராகச் செயல்பட்டு, பாகிஸ்தான் ஒரு முக்கியப் பாலமாக உருவெடுத்துள்ளது.

பாகிஸ்தான், ஈரானுடன் நீண்டகாலத் தொடர்புகளையும் வளைகுடாப் பகுதியில் நெருங்கிய உறவுகளையும் கொண்டுள்ளது. அதேவேளையில், ஷெரீப்பும் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அமின் முனீரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் தனிப்பட்ட நல்லுறவை ஏற்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் ஜோஹான் வாடேபுல், பாகிஸ்தானில் மிக விரைவில் அமெரிக்கா-ஈரான் நேரடி சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்ப்பதாக வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |