போர் நிறுத்த உடன்படிக்கையை உடனே மீறிய பாகிஸ்தான்- ஸ்ரீநகரில் ட்ரோன் தாக்குதல்
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான புதிய போர் நிறுத்த உடன்படிக்கை சில மணி நேரங்களில் பாகிஸ்தானால் உடைக்கப்பட்டுவிட்டது.
இன்று காலை இரு நாடுகளும் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதையடுத்து, பாகிஸ்தான் இன்று மாலை ஸ்ரீநகரிலும், ஜம்முவிலும் ட்ரோன் தாக்குதல் மற்றும் ஷெல் தாக்குதல் நடத்தியது.
ஸ்ரீநகர் பகுதியில் பல வெடிப்பு சத்தங்கள் கேட்கப்பட்டன. அப்பகுதியில் பிளாக்அவுட் அமுல்படுத்தப்பட்டது. ராஜஸ்தானின் போக்கரனிலும், காஷ்மீரின் பாராமுல்லாவிலும் பாகிஸ்தானிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
ஜம்முவின் அக்னூர், ராஜௌரி, ஆர்.எஸ் புரா பகுதிகளில் பாகிஸ்தான் படை சக்திவாய்ந்த ஷெல் தாக்குதல் நடத்தியதாக பிஎஸ்எப் அதிகாரிகள் தெரிவித்தனர். பேலன்வாலா லோக் பகுதியில் மோதல் மீண்டும் தொடங்கியுள்ளது.
பாராமுல்லா மற்றும் ராஜௌரியிலும் ட்ரோன் பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. காட்ரா பகுதியில் ஏரியல் நடவடிக்கை உறுதி செய்யப்பட்டதுடன், மாதா வைஷ்ணோ தேவி கோயில் வழிப்பயண முகாமிலும் பிளாக்அவுட் அறிவிக்கப்பட்டது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா “சீஸ் ஃபயர் எங்கே? ஸ்ரீநகர் முழுவதும் வெடிப்புகள்,” என்று ட்வீட் செய்து, ட்ரோன் தாக்குதலின் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
This is no ceasefire. The air defence units in the middle of Srinagar just opened up. pic.twitter.com/HjRh2V3iNW
— Omar Abdullah (@OmarAbdullah) May 10, 2025
பஞ்சாபின் ஜலந்தர், லூதியானா மாவட்டங்களில் உயர் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளுக்குள் இருக்க வேண்டுமெனவும், சுயமாக பிளாக்அவுட் செய்யுமாறும் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த தகவல்களின் அடிப்படையில், இருநாடுகளுக்கிடையேயான பதற்ற நிலை மீண்டும் தீவிரமாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |