விடுமுறைக்காக பிரான்ஸ் சென்ற பாகிஸ்தான் முன்னாள் இராணுவத் தளபதிக்கு நேர்ந்த அவமானம்
விடுமுறைக்காக பிரான்ஸ் சென்றிருந்த பாகிஸ்தான் முன்னாள் இராணுவத் தளபதி ஒருவர், அடையாளம் தெரியாத நபரால் அவமதிக்கப்பட்டார்.
வெளியாகியுள்ள வீடியோ
பாகிஸ்தான் முன்னாள் இராணுவத் தளபதியான Qamar Javed Bajwa, தனது மனைவியுடன் பிரான்சுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.
அப்போது, திடீரென ஒருவர் அவரை மோசமான வார்த்தைகளால் விமர்சிக்கத் துவங்கியுள்ளார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.
Former Army Chief Qamar Bajwa's misconduct incident in France pic.twitter.com/vESA3wFdF8
— SAYS.PK (@SAYSdotPK) June 5, 2023
விரும்பத்தகாத சம்பவத்தின் பின்னணி
Bajwaவை விமர்சிக்கும் நபர் அந்த வீடியோவில் இடம்பெறாவிட்டாலும், அவர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆப்கன் நாட்டவரான அந்த நபர், பாகிஸ்தானின் மனித உரிமை மீறல்கள், தவறான நடத்தை மற்றும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு பாகிஸ்தான் உதவியது ஆகிய விடயங்களுக்காக பாகிஸ்தான் இராணுவம் மீது குற்றம் சாட்டியதாக, மொழிபெயர்ப்பாளர்கள் உதவியுடன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தன்னை அவமதித்த நபரிடம், தான் பொலிசை அழைக்கப்போவதாக Bajwa எச்சரித்தும், அதைக் குறித்து கவலையேபடாமல் அந்த நபர் வசைமழை பொழிய, அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார்கள் Bajwaவும் அவரது மனைவியும்!