தாலிபான்கள் உதவியை நாடிய பாகிஸ்தான்! காஷ்மீரில் அத்துமீறி தாக்குதலுக்கு வாய்ப்பு? அதிர்ச்சி தகவல்
காஷ்மீரை முழுவதுமாக அடைய தாலிபான்கள் உதவுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அவர்கள் வாக்களித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தாலிபான்களைப் பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. அது உண்மை தானோ என கூறும்படி ஓர் சம்பவம் தற்போது நடந்துள்ளது. தாலிபானுக்கு பாகிஸ்தான் இம்ரான் கான் அரசு மறைமுகமாக உதவி வருவதாக ஏற்கனவே தாலிபான் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் காஷ்மீரை ஆக்கிரமிக்க இம்ரான் கான் அரசு தாலிபான் அமைப்பின் உதவியை நாடுவதாக இம்ரான் கான் கட்சியின் கூட்டணிக் கட்சியான பாகிஸ்தான் தேகிரீக் இன்சாஃப் கட்சியின் தலைவர் நீலம் இர்ஷாத் ஷேக் தொலைக்காட்சிப் பேட்டியில் தெரிவித்துள்ளது தற்போது இந்திய அரசுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
இதுகுறித்து தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசிய நீலம், காஷ்மீரை முழுவதுமாக அடைய தாலிபான்கள் உதவுவதாக இம்ரான் கானுக்கு வாக்களித்து உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் அதிர்ச்சி அடைந்தார்.
நீங்கள் சொன்ன இந்த செய்தி கண்டிப்பாக இந்திய அரசை சென்று சேர வேண்டும் என்று அவர் கூறினார். அவரது அதிர்ச்சியை பொருட்படுத்தாத நீலம், தொடர்ந்து தாலிபான் பாகிஸ்தான் ஆகிய இரண்டுமே இரு வேறு விதமாக பாதிக்கப்பட்டபட்டவை என்பதால் காஷ்மீரை ஆக்கிரமிக்க தாலிபான் உதவுகிறது என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ஆளுங்கட்சி கூட்டணியில் இருக்கும் ஓர் கட்சித் தலைவர் இவ்வாறு தொலைக்காட்சியில் வெளிப்படையாக பேட்டி அளித்ததை அடுத்து இம்ரான் கான் அரசு தாலிபான்கள் உடன் தொடர்பில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் காஷ்மீர் மாநிலத்தில் தாலிபான்களின் உதவியுடன் பாகிஸ்தான் அரசு அத்துமீறி தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது இதன்மூலமாகத் தெரிகிறது எனவும் கூறப்படுகிறது.