தமிழ்நாட்டிற்கு வர இருந்த பாகிஸ்தான் அணி - திடீர் விலகலுக்கு காரணம் என்ன?
தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ள ஜூனியர் ஹாக்கி உலக கோப்பையில் இருந்து பாகிஸ்தான் அணி விலகியுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் மோதல்
காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்திய பிறகு, பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. இதனை தொடர்ந்து இரு நாடுகளின் உறவில் இருந்த விரிசல் மேலும் அதிகரித்தது.

ஏற்கனவே பாகிஸ்தானில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் இந்தியா பங்குபெற மறுத்து வருகிறது. பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டால், இந்தியா விளையாடும் போட்டிகள் வேறு நாட்டிற்கு மாற்றப்பட்டிக்கு வந்தது.

இதே போல், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், தங்கள் அணியை இனி இந்தியாவிற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கூட இந்திய அணி வீரர்கள் கை குலுக்க மறுத்தது, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரிடமிருந்து கோப்பையை பெற மறுத்தது போன்ற விடயங்கள் சர்ச்சை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நவம்பர் 28 முதல் 10 டிசம்பர் வரை, தமிழ்நாட்டின் சென்னை மற்றும் மதுரையில், 24 நாடுகள் கலந்து கொள்ளும் ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை நடைபெற உள்ளது.

இதில், கலந்து கொள்ள பாகிஸ்தான் ஹாக்கி அணி, இந்தியாவிற்கு வருவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம், மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் ஆகியவை ஒப்புதல் வழங்கி இருந்தது.
பாகிஸ்தான் விலகல்
தற்போது ஜூனியர் ஹாக்கி உலக கோப்பையில் இருந்து பாகிஸ்தான் விலகுவதாக சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (FIH) அறிவித்துள்ளது.

இது குறித்து பேசிய ஹாக்கி இந்தியாவின் பொதுச் செயலாளர் போலந்த் சிங், "பாகிஸ்தான் விலகியது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு அதிகாரிகளுடன் நான் பேசிய போது அவர்கள் பங்கேற்பதை உறுதிப்படுத்தினர். அதன் பிறகு என்ன நடந்தது என தெரியவில்லை" என கூறினார்.
இது குறித்து பேசிய பாகிஸ்தான் ஹாக்கி அமைப்பின் பொதுச் செயலாளர் ராணா முஜாஹித், FIHயிடம், இந்தியா தவிர்த்து நடுநிலையான ஒரு இடத்தை தேர்வு செய்ய வலியுறுத்தியுள்ளோம். இந்தியாவில் நடைபெறும் ஜூனியர் ஹாக்கி உலக கோப்பையை தவற விடுவது எங்கள் ஹாக்கி வளர்ச்சியை பாதிக்கும்.
அவர்களது விளையாட்டு வீரர்கள் நடுநிலையான இடங்களில் கூட வேறு விளையாட்டுகளில் கைகுலுக்க தயாராக இல்லாதபோது, நாங்கள் இந்தியாவிற்கு சென்று விளையாட வேண்டும் என அவர்கள் எப்படி எதிர்பார்க்கிறார்கள் என்பதை FIH-க்கு தெரிவித்துள்ளோம்" என விளக்கமளித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |