காதலனை கரம் பிடிக்க இந்திய எல்லை வந்த பாகிஸ்தான் பெண்! கொண்டாடி வரவேற்ற இளைஞர் குடும்பம்
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்திய இளைஞரை திருமணம் செய்து கொள்வதற்காக வந்த போது, காதலன் குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு விட்டு காதல்
இந்திய மாநிலம் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சமீர் கான். இவர், வேலையின் காரணமாக பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாப் மாகாணத்தில் தங்கியிருந்தார். அப்போது, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஜவாரியா கன்னம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்திய எல்லை வந்த பாகிஸ்தான் பெண்
பின்னர், இரு வீட்டினரும் சம்மதம் தெரிவித்து ஒன்லைன் வழியாக பேசி திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அப்போது, ஜவாரியா இந்திய வருவதற்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், ஒன்லைன் வழியாகவே திருமண நிச்சதார்த்தம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, ஜவாரியாவுக்கு விசா கிடைத்ததில் அத்தாரி-வாகா எல்லை வழியாக இந்தியா வர முடிவானது. இதன் பின்னர் நேற்று வாகா எல்லைக்கு தந்தையுடன் வந்த ஜவாரியாவை, இளைஞரின் குடும்பத்தினர் உற்சாகமாக வரவேற்றனர்.
The Bride from Karachi, #Pakistan arrived at the Attari-waggah border, Amritsar. The groom Samir Khan & his family welcomed her in India. The couple will get married in Kolkata. Talking to the media Samir Khan said it's been 3 yrs of their engagement & finally they will get… pic.twitter.com/ZYsM3prC16
— Akashdeep Thind (@thind_akashdeep) December 5, 2023
பின்பு, விமானம் மூலம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு புறப்பட்டு சென்றனர். அங்கு, இவர்களுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. 45 நாட்கள் விசாவில் இந்தியா வந்துள்ள ஜவாரியா, திருமணம் முடிந்த பிறகு விசா காலத்தை நீட்டிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |