என் மனைவியை திருப்பி அனுப்புங்க: PUBG காதலனுக்காக இந்தியா வந்த பெண்ணின் கணவன் கோரிக்கை
இந்திய காதலனுடன் வாழ தனது நான்கு குழந்தைகளுடன் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ள பெண்ணின் கணவன் வெளியிட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பப்ஜி காதல்: 4 குழந்தைகளுடன் இந்தியாவிற்குள் நுழைந்த பெண்
பப்ஜியில் விளையாடும்போது இந்திய இளைஞருடன் காதல் வயப்பட்டு, சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த தனது மனைவி மற்றும் குழந்தைகளை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்புமாறு அப்பெண்ணின் கணவர் இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சீமா ஹைதர் எனும் 30 வயது மதிக்கத்தக்க பாகிஸ்தானிய பெண், PubG விளையாட்டில் பழக்கமான சச்சின் என்ற 25 வயது இந்திய இளைஞருடன் வாழ, பாகிஸ்தானிலிருந்து தனது நான்கு குழந்தைகளுடன் நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்
சச்சினுடன் நொய்டாவில் வடக்கை வீட்டில் வசித்துவந்த நிலையில் இருவரையும் பொலிஸார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். அவர்களுடன் இருந்த குழந்தைகளையும் பொலிஸார் காவலில் எடுத்தனர்.
இந்த வழக்கில், அவர்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இப்போது அவர்களுக்கு புது பிரச்சினை கிளம்பியுள்ளது.
சீமாவின் கணவர் வெளியிட்ட வீடியோ
சீமாவின் கணவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதில் இந்திய அரசிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். சீமா ஹைதரின் கணவர் குலாம் ஹைதர் தற்போது சவுதி அரேபியாவில் வசித்துவருகிறார்.
Seeing Pakistani woman Seema and Sachin back at home in Noida, India, her husband Ghulam Haider has issued a video from Saudi Arabia demanding his wife and kids are sent back to him. ? pic.twitter.com/J3S6qyhcMf
— Ashni Dhaor (@DhaorAshni) July 8, 2023
இந்த விவகாரத்தில் நரேந்திர மோடி அரசு தலையிட வேண்டும் என்று குலாம் ஹைதர் வீடியோவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது மனைவி மற்றும் குழந்தைகளை அவர்களது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். PUBG மூலம் தனது மனைவியை இந்தியாவுக்கு வரவழைத்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Speaking to Hindustan Times from Saudi Arabia’s Mecca, #Pakistani woman Seema's husband Ghulam Haider Jakhrani on Thursday said he wants both the Indian and Pakistani governments to make efforts to ensure that his four children are returned to him safely.https://t.co/idsFHYDjaj pic.twitter.com/H1KC4qeF9Q
— Ashni Dhaor (@DhaorAshni) July 7, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |