இறுதிப்போட்டியில் படுதோல்வியடைந்த இந்தியா - U19 ஆசிய கோப்பையை வென்ற பாகிஸ்தான்
இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் U19 ஆசிய கோப்பையை வென்றுள்ளது.
U19 ஆசிய கோப்பை
U19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், டிசம்பர் 12 ஆம் திகதி தொடங்கி டிசம்பர் 21 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா U19 மற்றும் பாகிஸ்தான் U19 அணிகள் மோதியது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பாட்டம் ஆடிய பாகிஸ்தான் U19 அணி, 50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்கள் இழப்பிற்கு 347 ஓட்டங்கள் குவித்தது.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சமீர் மின்ஹாஸ் அதிரடியாக ஆடி, 113 பந்துகளில் 17 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் உட்பட 172 ஓட்டங்கள் குவித்தார்.
பாகிஸ்தான் அபார வெற்றி
348 ஓட்டங்கள் என்று வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்தியா U19 அணி, அடுத்தது விக்கெட்களை இழந்து, 26.2 ஓவர்களில் 10 விக்கெட்களை இழந்து வெறும் 156 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம், 191 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான், 2026 U19 ஆசிய கோப்பையை வென்றுள்ளது.
இந்த தொடரில், 471 ஓட்டங்கள் குவித்த சமீர் மின்ஹாஸ் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதன் மூலம், U19 ஆசிய கோப்பையின் ஒரு தொடரில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்த தொடரில், 14 விக்கெட்களை கைப்பற்றி அதிக விக்கெட்களை கைப்பற்றிய வீரராக இந்தியாவின் தீபேஷ் தேவேந்திரன் உள்ளார்.

முன்னதாக, 2012 U19 ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் மோதிய இந்தியா மற்றும் பாகிஸ்தான், சமமாக 282 ஓட்டங்கள் எடுத்ததால், கோப்பை இரு அணிகளுக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட்டது. தற்போது, 2வது முறையாக பாகிஸ்தான் கோப்பையை வென்றுள்ளது.
இந்தியா இதுவரை 8 முறை கோப்பை வென்று அதிக U19 ஆசிய கோப்பை வென்ற அணியாக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |