50,000 பவுண்டுகள் செலவில் பிரித்தானிய விசா: நாடொன்றில் நடைபெறும் மோசடி
பிரித்தானியாவில் கல்வி கற்பதற்கான மற்றும் வேலை செய்வதற்கான விசாக்களை, போலி ஆவணங்கள் மூலம் பெற்றுத்தர பாகிஸ்தான் ஏஜண்டுகள் சிலர் 50,000 பவுண்டுகள் வரை வசூலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசா மோசடி
பாகிஸ்தான் ஏஜண்டுகள் சிலர், பிரித்தானியாவில் கல்வி கற்பதற்கான மற்றும் வேலை செய்வதற்கான விசாக்களை பெறுவதற்கான CV, employment letter மற்றும் bank statements முதலான போலி ஆவணங்களை 50,000 பவுண்டுகளுக்கு விற்பனை செய்வதாக டெலிகிராப் பத்திரிகை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
பிரித்தானிய புலம்பெயர்தல் அமைப்பிலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி பாகிஸ்தான் ஏஜண்டுகள் இந்த மோசடியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
’எங்களிடம் விண்ணப்பிப்போர் பிரித்தானியா செல்வதற்கான சாத்தியக்கூறுகள் 98 சதவிகிதம் வெற்றி!’ என்றே பாகிஸ்தான் ஏஜண்ட் ஒருவர் விளம்பரம் செய்துள்ளதாகவும் டெலிகிராப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
எழுத்துப்பிழைகளுடன் கூடிய employment letter ஒன்றைப் பயன்படுத்தி ஒருவர் பிரித்தானியாவில் வேலை செய்வதற்கான விசா பெற்றுவிட்டதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
இன்னொரு விடயம் என்னவென்றால், உங்கள் விசா காலாவதியாகும் முன் நீங்கள் பிரித்தானியாவில் புகலிடம் கோரினால் தொடர்ந்து பிரித்தானியாவில் வேலை செய்யலாமாம்.
ஆக, பிரித்தானிய புலம்பெயர்தல் அமைப்பிலுள்ள இத்தகைய ஓட்டைகளைப் பயன்படுத்தி இவர்கள் மோசடி செய்கிறார்கள். ஆனால், இதெல்லாம் பிரித்தானிய உள்துறை அலுவலகத்துக்குத் தெரியவில்லை என்கிறது டெலிகிராப் பத்திரிகை.
கடந்த ஆண்டு மட்டும், 10,542 பாகிஸ்தானியர்கள் புகலிடக் கோரிக்கை விண்ணப்பம் அளித்துள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், இவர்கள் இப்படி ஒரு மோசடி செய்து பிரித்தானியாவுக்குள் நுழைந்தும் தாங்கள் முறைப்படியே பிரித்தானியா செல்வதாக அவர்கள் கூறுவதால், பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் டாப் 10 நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |