பாகிஸ்தானில் 2 ஆண்குறி மற்றும் ஆசனவாய் இல்லாமல் பிறந்த ஆண் குழந்தை! குடும்பத்தினர் அதிர்ச்சி
பாகிஸ்தானில் ஆண் குழந்தை ஒன்று இரண்டு ஆண் குறிகளுடனும், ஆசனவாய் இல்லாமலும் பிறந்து இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இரண்டு ஆண்குறி
பாகிஸ்தானில் மிகவும் அரிதான மருத்துவ வழக்கு ஒன்றில், புதிதாக பிறந்த ஆண் குழந்தை ஒன்று இரண்டு ஆண்குறிகளுடன் பிறந்துள்ளது, அத்துடன் அந்த குழந்தை ஆசனவாய் இல்லாமலும் பிறந்துள்ளது.
குழந்தையின் இரண்டு ஆண்குறிகளில் ஒன்று மற்றொன்றை விட 1 செ மீ பெரிதாக காணப்படுகிறது, அதே சமயம் குழந்தையால் இரண்டு ஆண்குறி துவாரங்களிலிருந்தும் சிறுநீர் கழிக்க முடிந்தது என்று மிரர் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான நேரங்களில் இவ்வாறு இரட்டை உறுப்புகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு உறுப்பு அறுவை சிகிச்சை மூலம் அகற்றபட வேண்டும், ஆனால் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இரண்டு ஆண்குறிகளையும் அப்படியே விட்டுள்ளனர்.
மேலும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஏன் இவ்வாறு செய்தனர் என்று தெளிவாக தெரியவில்லை.
ஆனால், ஆசனவாய் இல்லாமல் பிறந்த குழந்தை, மலம் கழிக்க உதவியாக நிபுணர்கள் கொலோனோஸ்கோபி அறுவை சிகிச்சையை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரிய வகை நோய்
சர்வதேச ஜர்னல் ஆஃப் சர்ஜரி கேஸ் ரிப்போர்ட்ஸில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், சம்பந்தப்பட்ட குழந்தை டிஃபாலியா என்னும் அரிய வகை நோய் தன்மையுடன் பிறந்து இருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஆறு மில்லியன் குழந்தைகளில் ஒருவரை பாதிக்கும் நிலை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.