அணு ஆயுதங்கள் மூலம் இந்தியாவை தாக்குவோம்! பாகிஸ்தான் தூதர் பகிரங்க மிரட்டல்
இந்தியா தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு, பாகிஸ்தான் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் என அந்நாட்டின் தூதர் மிரட்டல் விடுத்துள்ளார்.
பதற்றமான சூழல்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாஸி, இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதாகவும், எல்லைகளில் 130 ஏவுகணைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அணு ஆயுத தாக்குதல்
இந்த நிலையில், ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்துள்ளார்.
ரஷ்யா ஊடகமான ஆர்டிக்கு அவர் அளித்த நேர்காணலில், "இந்திய ஊடகங்கள் தங்களுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றன. இந்த விவாதங்களில் பங்கேற்க எங்களுக்கு ஆர்வம் இல்லை.
இருப்பினும், இந்தியா தாக்குதல் நடத்தினால், வழக்கமான ஆயுதங்கள் முதல் அணு ஆயுதங்கள் வரை எதையும் பயன்படுத்தித் தாக்குதல் நடத்துவோம்" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |