பாகிஸ்தானின் மிகப்பாரிய தங்கம், தாமிர வளம்: 70 பில்லியன் டொலர் வருமானம் தரும் ஜாக்பாட்
பாகிஸ்தானுக்கு ஆண்டுக்கு 70 பில்லியன் டொலர் வருமானம் கிடைக்கும் அளவிற்கு மிகப்பாரிய ஜாக்பாட் அடித்துள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள Reko Diq பகுதியில் உலகின் மிகப்பாரிய தாமிரம் மற்றும் தங்கம் சுரங்க வளங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வளங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் தனது பொருளாதார சிக்கல்களை தீர்க்க முயல்கிறது.
இந்த திட்டத்தின் முதலீடு சுமார் 6.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
ஆரம்ப கட்டத்தில் ஆண்டுக்கு 2,00,000 மெட்ரிக் டன் தாமிரம் (copper) உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் இது 4,00,000 மெட்ரிக் டன்களாக உயர்த்தப்படவுள்ளது.
இதன்மூலம், 37 ஆண்டுகளில் 70 பில்லியன் வருமானம் கிடைக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் கனடாவைச் சேர்ந்த Barrick Gold நிறுவனம் 50 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
மீதமுள்ள பங்குகள் பாகிஸ்தானின் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் உள்ளன.
ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இந்த திட்டத்திற்கு 410 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குகிறது.
இதில் BarrickGold 300 மில்லியன் டொலர் கடன் மற்றும் பாகிஸ்தான் அரசுக்கு 110 மில்லியன் டொலர் உத்தரவாதம் அடங்கும்.
மேலும், அமெரிக்கா, கனடா மற்றும் ஜப்பானின் நிதி நிறுவனங்களுடன் கூடுதல் நிதி உதவிக்காக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Reko Diq copper gold mine, Pakistan mining investment, ADB Pakistan funding, Barrick Gold Reko Diq, Balochistan mineral reserves, Pakistan economy revival, copper mine 2028 production, gold reserves Pakistan