இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம்! விசாரணையில் தெரியவந்த உண்மை
பழனி தனியார் விடுதியில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்பட்டதில் உண்மையில்லை என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி கூறுகையில், கண்ணூா் மருத்துவக்கல்லூரியில் கடந்த சில தினங்களுக்கு முன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 40 வயதுப் பெண் தன்னை பழனியில் 3 போ கும்பல் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளாா்.
இதனையடுத்து கேளர போலீஸ் அளித்த தகவலின் பேரில் தமிழக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினோம்.
அதில், ஜூன் 19 ஆம் தேதி கேரளத்தைச் சோந்த தா்மராஜ், 40 வயது பெண் ஒருவருடன் பழனி தனியாா் விடுதியில் தங்கியுள்ளாா்.
அன்று முழுவதும் மது போதையில் தகராறு செய்துள்ளனர், இதனையடுத்து விடுதி உரிமையாளர் அவர்களை வெளியேற்றியுள்ளார்.
தொடர்ந்து பழனி, திண்டுக்கல் பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளனர், இதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது.
மேலும் விடுதி உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க தர்மராஜ் முயன்றுள்ளார், தர்மராஜின் சகோதரியிடம் நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் அவரது மனைவி இல்லை என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான காயங்கள், தடயங்கள் ஏதுமில்லை என மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பழனிக்கு ஆன்மிகப் பயணம் வந்ததாக, தர்மராஜ் கூறியிருகிறார். ஆனால், அவர்கள் கூறும் தேதியில் கோயில்கள் திறக்கப்படவேயில்லை.
அவ்வாறிருக்கு அவர்கள் ஆன்மிகப் பயணம் வந்தது எப்படி?
என பல கேள்விகள் எழுந்துள்ளதாக கூறியுள்ளார்.