போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில்...பாலஸ்தீனிய அதிகாரி சுட்டுக் கொலை: லெபனானில் பதற்றம்
தெற்கு லெபனானில் உள்ள அகதிகள் முகாமில் பாலஸ்தீன பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் போராளிக் குழுவிற்கு எதிராக சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவத்திற்கும், பாலஸ்தீன ஜிஹாத் போராளிக் குழுவிற்கும் இடையே கடிமையான சண்டை நடைபெற்றது.
இதில் 31க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்த நிலையில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன போராளிகளுக்கும் இடையே திங்கள்கிழமை போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.
AFP
இந்தநிலையில், போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, தெற்கு லெபனானில் உள்ள அகதிகள் முகாமில் பாலஸ்தீனிய அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக மூன்று பாலஸ்தீனிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுத் தொடர்பாக வெளிவந்துள்ள தகவலில், பாதுகாப்பு அதிகாரி அலாதின் அடையாளம் தெரியாத நபர்களால் தலையில் சுடப்பட்டு, பின்னர் அவரது காயங்களால் இறந்தாகவும் அங்குள்ள வட்டாரங்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
AFP
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானியாவில் பயங்கர வெடிவிபத்து: நான்கு வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்
லெபனானில் உள்ள பாலஸ்தீனிய முகாம்களில் ஒன்றான ஐன் எல்-ஹில்வேயில் பல்வேறு பாலஸ்தீனிய பிரிவுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒருங்கிணைப்புக்கு பாதுகாப்பு அதிகாரி அலாதீன் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.