போலி சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்.., விசாரணையில் அம்பலமான உண்மை
போலி சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்ற ஊராட்சி தலைவரை தகுதி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
போலி சான்றிதழ்
உள்ளாட்சி தேர்தலில், கணிசமான இடங்கள், நகராட்சி தலைவர் பதவிகள், மாநகராட்சி மேயர் பதவிகள் பட்டியல் இனத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் பிற சாதியை சேர்ந்தவர்கள் வர முடியாது. மேலும், போலி சான்றிதழ்கள் கொடுத்து அவர்கள் வெற்றி பெற்றாலும், பின்னாளில் தெரியவந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு, அவர்களின் பதவியும் பறிக்கப்படும்.
உள்ளாட்சி பதவிகள் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தாலே நடவடிக்கை எடுக்கப்படும். அந்தவகையில், வேலூரில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் தோளப்பள்ளி ஊராட்சி ஆதிதிராவிடர் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த உள்ளாட்சி தேர்தலில் கல்பனா என்பவர் வெற்றி பெற்றார். இவர் வேட்புமனு தாக்கலின்போது ஆதிதிராவிடர் என போலி சாதி சான்றிதழை கொடுத்து வெற்றி பெற்றதாக, அவரை எதிர்த்து போட்டியிட்ட பாக்கியராஜ் என்பவர் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தார்.
பின்னர் நடத்திய விசாரணையில், கல்பனா ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர் இல்லை என்றும், போலியாக சாதி சான்றிதழை கொடுத்து வெற்றி பெற்றார் என்றும் தெரியவந்தது.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பாக வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், ஆதிதிராவிடர் சாதி சான்று ரத்து செய்யப்பட்டு, அவரது காசோலை அதிகாரமும் கடந்த ஆண்டு ஆட்சியரால் பறிக்கப்பட்டது.
இந்நிலையில், 2 ஆண்டுகள் கழித்து தோளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்து கல்பனாவை தகுதிநீக்கம் செய்து அம்மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டார்.
ள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |