€8 மில்லியன் செலவு! 2 பாண்டாக்களை சீனாவுக்கு திருப்பி அனுப்பும் பின்லாந்து
இரண்டு பெரிய பாண்டாக்களை பின்லாந்து மீண்டும் சீனாவுக்கு திருப்பி அனுப்ப உள்ளன.
மீண்டும் சீனாவுக்கு திரும்பும் பாண்டாக்கள்
சீனா மற்றும் பின்லாந்து ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான 15 ஆண்டு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக லுமி(Lumi) மற்றும் பைரி(Pyry) என்ற இரண்டு பாண்டாக்கள் பின்லாந்துக்கு கொண்டுவரப்பட்டன.
இந்த இரண்டு பாண்டாக்களின் பராமரிப்பு செலவுகள் சுமார் €1.5 மில்லியனைத் தாண்டுவதால் அவற்றின் வருடாந்திர பராமரிப்பு செலவுகளை பூங்காவால் தாங்க முடியவில்லை.
COVID-19 தொற்றுநோய் மற்றும் அதிகரிக்கும் விலைவாசி காரணமாக பூங்கா அதிகரிக்கும் கடன்களை எதிர்கொண்டது. இந்நிலையில் பாண்டாவுக்கான வசதிகளில் €8 மில்லியனுக்கும் அதிகமான முதலீடுகள் இருந்தபோதிலும், 8 ஆண்டுகளுக்கு முன்னதாக ஆர்தரி பூங்காவுக்கு(Ahtari Zoo) கொண்டு வரப்பட்ட இரண்டு பாண்டாக்களும் தற்போது நிதிச் சுமை காரணமாக மீண்டும் சீனாவுக்கு திருப்பி அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் படி, இரண்டு பாண்டாக்களும் நவம்பர் மாதத்தில் சீனாவுக்கு திரும்பவுள்ளன.
சம்மதம் தெரிவித்த சீனா
பூங்காவும் ஃபின்லாந்து அரசும் பாண்டாக்களை ஃபின்லாந்தில் வைத்திருக்க தீர்வுகளைத் தேடி உள்ளன. இருப்பினும், விரிவான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, சீன அரசு அவற்றைத் திரும்பப் பெற ஒப்புக் கொண்டுள்ளது.
பின்லாந்து வெளியுறவு அமைச்சகம், இந்த முடிவு முற்றிலும் வணிக ரீதியானது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை பாதிக்காது என்று தெளிவுபடுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |