உன் ஆடை மிகவும் சிறியதாக உள்ளது! எல்லாம் தெரிகிறது... அவமானப்படுத்தப்பட்ட பிரபல ஒலிம்பிக் வீராங்கனை
பாரா-ஒலிம்பிக் தடகள வீராங்கனை ஆலிவியா பிரீன், இங்கிலிஷ் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டயில் கலந்து கொண்ட போது அவர் ஆடை தொடர்பில் போட்டி அமைப்பாளர்களால் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.
வெல்ஷ் நாட்டைச் சேர்ந்த பாரா-ஒலிம்பிக் தடகள வீராங்கனை ஆலிவியா பிரீன். இவர் இங்கிலிஷ் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டித் தொடரில் லாங் ஜம்ப் போட்டியில் கலந்து கொண்டார்.
அப்போது இங்கிச்லித் சாம்பியன்ஷிப் அதிகாரி ஒருவர் உன் கீழாடை மிகச்சிறியதாக இருக்கிறது, எல்லாம் தெரிகிறது, இது முறையல்ல என்று கூறியுள்ளார்.
இதனால் பெருத்த அவமானம் அடைந்தார் மாற்றுத் திறனாளி வீராங்கனை ஆலிவியா பிரீன். ஆலிவியா பிரீன் பெருமூளை வாதத்தினால் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவர் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி வருபவர். இதனையடுத்து அவமானமடைந்த ஆலிவியா பிரீன், நான் பல ஆண்டுகளாக இந்த பிரீஃபைத்தான் அணிகிறேன் இது இந்தப் போட்டிக்கென தயாரிக்கப்பட்டது.
டோக்கியோவிலும் இதை அணிவேன். ஆனால் என் கேள்வி என்னவெனில் ஒரு ஆண் வீரர் இதே போன்று அணிந்தால் இப்படி சொல்வார்களா என்பதே. மற்ற பெண் வீராங்கனைகளுக்கு இந்தப் பிரச்னை இல்லை.
எப்போதும் பெண்கள்தான் தங்கள் ஆடை பற்றிய கவனமேற்கொள்ள வேண்டும் போலிருக்கிறது. இது தொடர்பாக நான் பிரிட்டன் தடகள அமைப்பிடம் புகார் எழுப்புவேன் என கூறியுள்ளார்.
ஆலிவியா ஆடை பற்றி இப்படிக் கருத்துக் கூறியவர் ஒரு பெண் அதிகாரி என்பது முக்கிய விடயமாகும்.
இது தொடர்பாக ஆலிவியா பேசுகையில், அவருக்கு கொஞ்சம் நாகரிகம் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும், அவர்பாட்டுக்கு வந்து ஒரு பெண்ணிடம் இப்படி ஆடை உடுத்து இது சரியில்லை என்றெல்லாம் கூற முடியாது என கூறினார்.
அடுத்த மாதம் டோக்கியோவில் தொடங்கும் பாராலிம்பிக் போட்டிகளில் ஆலிவியா கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.