புதிய AI Start-up நிறுவனத்துடன் மீண்டும் கவனம் பெற்றுள்ள பராக் அகர்வால்
முன்னாள் Twitter CEO பராக் அகர்வால் தனது புதிய AI Start-up நிறுவனத்தின் மூலம் மீண்டும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
2022-ல் எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்கியபோது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வால் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
தற்போது அவர் Parallel Web Systems Inc என்ற புதிய AI Start-up நிறுவனத்தை தொடங்கி Silicon Valley-யில் மீண்டும் கவனத்தை பெற்றுள்ளார்.
2023-ல் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது 25 பேர் கொண்ட குழுவுடன் செயல்படுகிறது.
இந்நிறுவனத்தை உருவாக்க Khosla Ventures, Index Ventures, First Round Capital போன்ற பல முதலீட்டாளர்களிடம் 30 மில்லியன் டொலர் முதலீட்டை பெற்றுள்ளது.
Parallel என்பது AI Cloud Pratform ஆகும். இது AI அமைப்புகளை நிகழ்நேர ஓன்லைன் ஆராய்ச்சியை செய்ய உதவுகிறது.
AI-க்கு சொந்த browser இருப்பது போல, Parallel மூலம் இணையத்துல இருந்து தகவல்களை சேகரித்து சரிபார்த்து ஒழுங்குபடுத்த முடியும்.
Parallel சிறப்பம்சங்கள்
இது 8 தனித்திறன் கொண்ட Search Engine-கள் மூலம் செயல்படுகிறது.
Ultra8x எனப்படும் மேம்பபட்ட Search Engine 30 நிமிடங்கள் வரை ஆழமான தேடல்களை மேற்கொள்கிறது.
OpenAI-யின் Chat GPT-5 மற்றும் மனித நிபுணர்களை விட 10 சதவீதம் அதிக செயல்திறன் காட்டியுள்ளது.
பராக் அகர்வால், AI-ஐ நேரடி தகவல்களுடன் நம்பகமாக செயல்பட வைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Parallel Web Systems, Parag Agarwal AI Startup, AI research engines, Realtime AI Web research, AI Search Engines, AI Startup, Parallel AI Search Engine