மரண பயம்: புடின் இந்த வாகனத்தில் மட்டும்தான் பயணிக்கிறாராம்...
தன்னை யாராவது கொன்றுவிடுவார்களோ என்ற பயத்தில், ரஷ்ய ஜனாதிபதி புடின், அவருக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ரயிலில் மட்டும்தான் பயணிக்கிறாராம்.
விமானத்தில் கூட பயணிப்பதில்லை
ரஷ்ய ஜனாதிபதி புடின், உச்ச கட்ட பயத்தில் இருக்கிறாராம். தன்னை யாராவது கொன்றுவிட்டு தனது பதவியைப் பிடித்துக்கொள்வார்கள், அல்லது சாப்பாட்டில் யாராவது விஷம் வைத்துவிடுவார்கள் என பயந்துகொண்டே இருக்கிறாராம் அவர்.
அதனால், தான் விமானத்தில் பயணித்தால், யாராவது விமானத்தை சுட்டு வீழ்த்திவிடக்கூடுமென அஞ்சி புடின் ஜனாதிபதிக்கான விமானத்தில் கூட பயணிப்பதில்லையாம்.
Image: Getty Images
இந்த வாகனத்தில்மட்டும்தான் பயணம்
புடினுடன் உளவுத்துறை பயிற்சிக்கூடத்தில் பயின்ற Yury Shvets (71) என்பவர், புடினுடைய பயம் உச்சகட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கிறார்.
அவர் அதிகம் பயப்படுவது, தனக்கு யாராவது உணவில் விஷம் வைத்துவிடுவார்களோ என்பதுதான் என்கிறார் Yury.
Image: Alesia Batsman/ east2west news)
தனது பயம் காரணமாக, தனக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பான ரயில் ஒன்றில் மட்டுமே பயணிக்கிறார் புடின்.
பார்ப்பதற்கு சாதாரண பயணிகள் ரயில் போலவே காணப்படும் புடினுடைய சிறப்பு ரயிலில், தொலைக்கட்டுப்பாட்டுக்காக ஆன்டென்னாக்கள் பொருத்தப்பட்டிருப்பது மட்டுமே மற்ற ரயில்களுக்கும் இந்த ரயிலுக்கும் வெளிப்படையாகத் தெரியும் வித்தியாசமாகும்.
Image: LIB1995/east2west news
Image: Kremlin.ru/east2west news
Image: Kremlin.ru/east2west news