மாணவர்கள் ஸ்கூலுக்கு லீவு போட்டால் பெற்றோர்களுக்கு சிறை! எங்கு தெரியுமா?
பள்ளி மாணவர்கள் குறிப்பிட்ட நாள்களுக்கு விடுமுறை எடுத்தால் மாணவர்களின் பெற்றோர் கைது செய்யப்படுவார்கள் என சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.
பெற்றோருக்கு சிறை தண்டனை
பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணிப்பதை தடுக்கும் வகையில் சவுதி அரேபியா அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், பள்ளி குழந்தைகள் சரியான காரணங்கள் ஏதும் இன்றி விடுமுறை எடுத்தால் குழந்தைகளின் பெற்றோர் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
istock
அதாவது, பள்ளி மாணவர் ஒருவர் பள்ளிக்கு 20 நாள்கள் வரவில்லை என்றால், மாணவரின் பெற்றோர் குறித்த தகவலை கல்வி அமைச்சகத்திற்கு பள்ளி முதல்வர் அனுப்ப வேண்டும். இதனைத்தொடர்ந்து, குழந்தையிடம் வாக்குமூலம் பெறப்படும். இதன் விசாரணைக்காக குடும்ப நலத் துறை அரசு வழக்கறிஞர் நியமிக்கப்படுவார்.
இதனிடையே, பெற்றோரால் குழந்தை பள்ளிக்கு வரவில்லை என்பது நிரூபிக்கப்பட்டால் பெற்றோருக்கு சிறை தண்டனை உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படும்.
எச்சரிக்கை
முதல் 3 நாள்களுக்கு குழந்தைகள் பள்ளிக்கு வரவில்லை என்றால் முதல் எச்சரிக்கை விடுக்கப்படும். அதாவது, மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு தகவல் அளிக்கப்படும்.
istock
தொடர்ந்து 5 நாள்கள் விடுமுறை எடுத்தால் இரண்டாம் தகவல் பெற்றோருக்கு தெரிவிக்கப்படும். 10 நாள்கள் தொடர்ந்து எடுத்தால் மூன்றாம் எச்சரிக்கை விடுக்கப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |