10 வயது மகனை விமான நிலையத்தில் தவிக்கவிட்டு விடுமுறைக்குச் சென்ற பெற்றோர் - அதிர்ச்சியூட்டும் காரணம்
ஐரோப்பிய நாடொன்றில், 10 வயதான சிறுவனை அவரது பெற்றோர் விமான நிலையத்தில் பரிதவிக்க விட்டுவிட்டு விடுமுறைக்காக விமானத்தில் ஏறிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயின் விமான நிலையத்தில் நடந்த இச்சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க் போஸ்டின் செய்தியின்படி, அந்த சிறுவனின் ஸ்பானிஷ் பாஸ்போர்ட் காலாவதியானது என்றும், விசா தேவைப்படுவதால் பயணிக்க முடியாது என பெற்றோர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதை அறிந்ததும், தங்களது விமானத்தை தவறவிட விரும்பாத பெற்றோர், ஒருவரை அழைத்துக் கொண்டு வர சொன்னதாக கூறி, பையனை விமான நிலையத்தில் விட்டுவிட்டனர்.
இந்தச் சம்பவத்தை விமான நிலைய நிர்வாக அலுவலர் லிலியன், TikTok வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
தாயாகவும் உள்ள லிலியன், இந்த சம்பவம் தனது வாழ்க்கையில் பார்த்த மிகவும் கோரமான, சோகம் தரும் சம்பவம் என தெரிவித்துள்ளார்.
பொலிஸார் உடனே சம்பவ இடத்திற்கு வந்தனர். பெற்றோரின் பயணப்பைகள் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு, அவர்கள் விமான நிலைய பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.
இச்சம்பவம், கடந்த ஆண்டுகளில் நடந்த குழந்தைகளை விமான நிலையத்தில் விட்டுச்சென்ற சம்பவங்களை நினைவூட்டினாலும், இதுபோன்ற திட்டமிட்ட செயல் மிகவும் அபராதக்குரியது என விமான நிலைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Spain airport child abandonment, Parents leave 10-year-old alone, Viral TikTok airport incident, Passport expired travel issue, Airport police child rescue, Travel visa denied family drama, Child left behind Spain airport, Airport shocking incidents