ஆவிகளுக்குள் திருமணம் செய்யும் வித்தியாசமான நடைமுறை: இறந்துபோன மகளுக்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், 30 ஆண்டுகளுக்கு முன் இறந்த தங்கள் மகளுக்கு மாப்பிள்ளை தேடுகிறார்கள் ஒரு தம்பதியர்.
கன்னியாகவே மரணமடைந்த பெண்
கர்நாடகா மாநிலத்திலுள்ள Puttur என்னுமிடத்தில் வாழ்ந்து வரும் ஒரு குடும்பத்தில், ஒரு பெண் குழந்தை மரணமடைந்திருக்கிறாள். அதைத் தொடர்ந்து அந்த குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
ஆகவே, எதனால் இப்படி தங்கள் குடும்பத்துக்கு பிரச்சினை மேல் பிரச்சினை ஏற்படுகிறது என பெரியவர்களிடம் கேட்டுள்ளனர் அந்த தம்பதியர். அவர்கள், மரணமடைந்த அந்தப் பெண்ணின் ஆவி அமைதியடையாமல் சுற்றித்திரிவதே பிரச்சினைகளுக்குக் காரணம் என்று கூறியிருக்கிறார்கள். எனவே, தங்கள் மகள் கன்னியாகவே மரணமடைந்ததால்தான் இந்த பிரச்சினைகள் ஏற்படுகின்றன என முடிவு செய்த அந்த தம்பதியர், தங்கள் மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்கள்.
representational image
மாப்பிள்ளை இப்படித்தான் இருக்கவேண்டும்
ஆக, அந்தக் குடும்பம், தங்கள் மகளுக்கு மணமகன் தேவை என செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்த பெண்ணுக்கு மணமகன் தேவை. மணமகன், 30 ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்த ஆணாக இருப்பது அவசியம். விருப்பமுடையோர் கீழ்க்கண்ட எண்ணை அழைக்கவும் என்கிறது அந்த விளம்பரம்.
உள்ளூரில் பிரபலமான அந்த பத்திரிகையில் வெளியாகியுள்ள அந்த வித்தியாசமான விளம்பரம், பெரிதும் கவனம் ஈர்த்துள்ள நிலையில், கர்நாடகாவின் சில பகுதிகளில், இப்படி ஆவிகளுக்குள் திருமணம் செய்துவைக்கும் நடைமுறை இன்றும் பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |