துஷ்பிரோயகத்தை தவிர்க்க, மகள்களின் கல்லறைகளுக்கு பூட்டு போடும் பாகிஸ்தான் பெற்றோர்கள்: அதிர்ச்சியூட்டும் தகவல்
பாகிஸ்தான் நாட்டிலுள்ள சில பெற்றோர்கள் தங்கள் இறந்த மகள்களின் கல்லறைகளுக்கு பூட்டு போடுவதாக, வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் மீதான வன்முறை
உலகமெங்கும் பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது, மத ரீதியான நல் ஒழுக்கங்களை கொண்ட பாகிஸ்தானும் இதற்கு விதிவிலக்கில்லை.
@twitter
இந்தியா போன்ற சில நாடுகளில், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பெண் ஏதாவது ஒரு வகையில் துஷ்பிரோயகம் செய்யப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால் பாகிஸ்தானில் நடைபெற்றுள்ள இச்செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
@twitter
பாகிஸ்தானில் பெற்றோர்கள் தங்களது இறந்த பெண்களின் கல்லறைகளுக்கு பூட்டு போடப்பட்டிருப்பதை காணும் போது, ஒட்டு மொத்த சமுதாயமும் வெட்கித் தலை குனியும் நிலை உண்டாகியுள்ளது.
நெக்ரொபிலியாக்கள்
பாகிஸ்தான் நாட்டில் பெண்களின் உடல்கள் பல சந்தர்ப்பங்களில் தோண்டி எடுக்கப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் அந்நாட்டில் நெக்ரொபிலியா வழக்கு அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
@gettyimages
நெக்ரொபிலியா மனநிலை கொண்டவர்கள் பெரும்பாலும் கல்லறையை தோண்டி, பெண்ணின் பிணங்களை துஷ்பிரோயகம் செய்ய கூடிய மனோபாவம் கொண்டவர்கள். மேலும் இவர்கள் உயிரோடுள்ள பெண்ணை கொன்று கூட துஷ்பிரோயகம் செய்யகூட தயங்காதவர்கள், இவர்கள் நெக்ரொபிலியாக்கள் என அழைக்கப்படுகின்றனர்.
ஹாரிஸ் சுல்தான் குற்றச்சாட்டு
இது தொடர்பாக பாகிஸ்தானின் முன்னாள் முஸ்லீம் நாத்திக ஆர்வலரும், "கடவுளின் சாபம், நான் ஏன் இஸ்லாத்தை விட்டு வெளியேறினேன்" என்ற புத்தகத்தின் ஆசிரியருமான ஹாரிஸ் சுல்தான், இத்தகைய மோசமான செயல்களுக்கு கடுமையான இஸ்லாமிய சித்தாந்தத்தை குற்றம் சாட்டியுள்ளார்.
"பாகிஸ்தான் பாலியல் விரக்தியுள்ள ஒரு சமூகத்தை உருவாக்கியுள்ளது, மக்கள் தங்கள் மகள்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதைத் தடுக்க அவர்களின் கல்லறைகளில் பூட்டுகளை போடுகிறார்கள். நீங்கள் புர்காவை கற்பழிப்புடன் இணைக்கும்போது, அது உங்களை கல்லறைக்கு பின்தொடர்கிறது" என்று சுல்தான் கடந்த புதன்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
Pakistan has created such a horny, sexually frustrated society that people are now putting padlocks on the graves of their daughters to prevent them from getting raped.
— Harris Sultan (@TheHarrisSultan) April 26, 2023
When you link the burqa with rape, it follows you to the grave. pic.twitter.com/THrRO1y6ok
கராச்சியின் வடக்கு நாஜிமாபாத்தைச் சேர்ந்த முஹம்மது ரிஸ்வான் என்ற கல்லறை காவலர், 48 பெண் சடலங்களை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்ட பின்னர், 2011 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் ஒரு நெக்ரோபிலியா வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.