ChatGPT பேச்சை கேட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சிறுவன் - Open AI மீது பெற்றோர் வழக்கு
ChatGPT போன்ற AI செயலிகளை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வீட்டுப்பாடம் தொடங்கி கோடிங் எழுதுவது வரை அனைத்து வேலைகளுக்கும் சாட்ஜிபிடி உதவியை நாடி வருகின்றனர்.
சாட்ஜிபிடியால் உயிரை மாய்த்த சிறுவன்
அதுமட்டுமல்லாது, சிலர் சாட்ஜிபிடியை சக மனிதர் போல கருதி தங்களது அந்தரங்க தகவல்களையும் பகிர்ந்து மனநல ஆலோசனை பெற தொடங்கியுள்ளனர்.
அப்படியாக, அமெரிக்காவை சேர்ந்த 16 வயது சிறுவன் ChatGPT உடன் செய்த உரையாடலால் உயிரை மாய்த்துக்கொண்டதாக அவரது பெற்றோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை சேர்ந்த 16 வயதான adam raine என்ற சிறுவன் 2024 ஆம் ஆண்டு முதல் வீட்டுப்பாடம் குறித்த சந்தேகம் கேட்பது, எதிர்கால தொழில் பாதை ஆகியவற்றிற்காக சாட்ஜிபிடியை பயன்படுத்த தொடங்கியுள்ளார்.
நாளடைவில் அதிகளவிலான எதிர்மறை எண்ணங்களுடன் அவரின் உரையாடல் இருந்துள்ளது. கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி, 16 வயதான adam raine தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
Open AI மீது வழக்கு
அவர் உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவிற்கு ChatGPT தான் தூண்டியதாகவும், வழிகாட்டியாகவும், அவரது பெற்றோர் Matthew மற்றும் Maria Raine தெரிவித்துள்ளனர்.

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி
மரண முறைகள் குறித்த விவரங்களை வழங்கியதோடு, தற்கொலை குறிப்பும் ChatGPT வழங்கியுள்ளது என அவரது பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதற்கு சட்ட நடவடிக்கை மற்றும் பண இழப்பீடு வேண்டும் என கூறி Open AI நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
சிறுவனின் உயிரிழப்பிற்கு வருத்தம் தெரிவித்துள்ள ChatGPT, சில குறைபாடுகள் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளதோடு, பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |