விமானத்தின் ஜன்னலுக்கு வெளியே தலையை விட்ட பைலட்…ஒற்றை பயணிக்காக நடந்த சுவாரஸ்யம்: வீடியோ
விமான பயணி ஒருவர் தனது பயணத்தின் போது செல்போனை மறந்து விட்டு வந்ததை தொடர்ந்து, அவருக்காக விமான பைலட் விமானத்தின் ஜன்னல் வழியாக செல்போனை வாங்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.
விமான நிலையத்தில் ஆச்சரியமூட்டும் சம்பவம்
அமெரிக்காவின் கலிபோர்னியா long beach விமான நிலையத்தில் விமானம் புறப்படும் நேரத்தில் அவசர அவசரமாக பயணம் செய்து விமானத்தில் ஏறிய பயணி ஒருவர் தனது செல்போனை வெளியிலேயே மறந்து வைத்து விட்டு வந்துள்ளார்.
இதனை அறிந்த விமான நிலைய ஊழியர்கள் அந்த செல்போனை பயணியிடம் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
Passenger left their cellphone at Long Beach Airport gate area and this flight crew made sure they got it back ☺ pic.twitter.com/aSQOkfbiVc
— agent Smith (@agnt_Smith_page) November 13, 2022
இதற்காக அந்த விமானத்தின் பைலட்-டை விமானத்தின் ஜன்னல் வழியாக வெளியேறி அந்த செல்போனை பெற்று சம்பந்தப்பட்ட பயணியிடம் சேர்க்குமாறு செய்துள்ளனர்.
வைரல் வீடியோ
இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோவில், விமானத்தின் பைலட் ஜன்னல் வழியாக தனது உடலை வெளியே எடுத்து சக விமான நிலைய அதிகாரியிடம் இருந்து செல்போனை வாங்குவது இடம்பெற்றுள்ளது.
விமானி அந்த செல்போனை பெற்றதும் அனைத்து ஊழியர்கள் முகத்திலும் மகிழ்ச்சி புன்னகை தோன்றியதும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
Happy Friday, #LongBeach!? pic.twitter.com/Qwy7qZ62Ia
— Long Beach Airport (@LGBAirport) November 4, 2022