பிரேசில் விமான விபத்தில் 62 பேர் உயிரிழப்பு: உள்ளூர் ஊடகம் வெளியிட்ட பரபரப்பு காட்சிகள்
பயணிகள் விமானம் ஒன்று பிரேசிலில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமான விபத்து
பிரேசிலின் சாவ் பாலோவில் (Sao Paulo) பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
விபத்தின் போது விமானத்தில் 58 பயணிகள் மற்றும் 4 விமான குழுவினர் இருந்ததாக கூறப்படுகிறது.
🇧🇷 | URGENTE: Un avión con 62 personas a bordo, 4 tripulantes y 58 pasajeros, se estrelló en Vinhedo, São Paulo, Brasil. pic.twitter.com/6ebArQlTEA
— Alerta Mundial (@AlertaMundoNews) August 9, 2024
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 62 பேரும் உயிரிழந்துவிட்டதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.//
வெளியான பரபரப்பு காட்சி
TV GloboNews ஒளிபரப்பிய காட்சிகளில், விமானத்தின் பெரும் பகுதியில் தீ பற்றி எரிவதையும், விமானத்தின் உட்புறத்தில் இருந்து கரும்புகை வெளியேறுவதையும் பார்க்க முடிகிறது.
உள்ளூர் தீயணைப்பு படையினர், விமானம் Vinhedo நகரத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
The aircraft involved is PS-VPB, a 14-year-old ATR72-500 built in 2010. The flight, #2Z2283, left Cascavel (CAC) at 14:56UTC bound for Sao Paolo (GRU). The last signal we received from the aircraft was at 16:22UTC. pic.twitter.com/yjskSPBUrf
— Flightradar24 (@flightradar24) August 9, 2024
இந்த ATR-72 விமானமானது பரானா மாகாணத்தில் உள்ள Cascavel-விலிருந்து சாவ் பாலோவின் சர்வதேச விமான நிலையமான Guarulhos நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |