நடுவானில் விமானத்தின் கழிப்பறைக்கு தீ வைத்த பயணி: போதைக்கு அடிமையானதால் ஏற்பட்ட வீபரிதம்
நிகோடின் போதைக்கு அடிமையான பயணி ஒருவர் நடுவானில் பறந்த விமானத்தில் தீ மூட்டினார்.
விமானத்திற்கு எந்த சேதமும் ஏற்படாததால், காவல்துறையை இந்த விஷயத்தில் ஈடுபடுத்த வேண்டாம் என முடிவு.
இஸ்ரேல், பாங்காக் இடையே பறந்த விமானத்தின் கழிவறையில் பயணி ஒருவர் தவறுதலாக தீ விபத்தினை ஏற்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டெல் அவிவ் மற்றும் பாங்காக் இடையே பறந்த எல் அல் விமானத்தில் (El Al flight) பயணித்த ஒருவர், விமானத்தின் கழிவறையில் தான் மறைத்து வைத்து இருந்த சிகரெட்டை புகைக்க முயன்ற போது தவறுதலாக தீப்பற்றி நடுவானில் அவசரநிலை ஏற்பட்டது.
NurPhoto via Getty Images
நிகோடின் போதைக்கு அடிமையான அந்த பயணி கழிவறையில் புகைந்து கொண்டிருந்த போது தனது சிகரெட் துண்டுகளை ஒரு குப்பைக் கூடைக்குள் எறிந்துள்ளார்.
இதனால் குப்பை தொட்டிக்குள் கொட்டப்பட்டு இருந்த காகிதங்கள் தீ பற்றி புகை வெளிவரவே, கழிவறையில் இருந்த புகை கண்டறியும் கருவிகள் மூலம் விமானப் பணிப் பெண்களுக்கு உடனடியாக அவசர தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து விமானக் குழுவினர் தீயை விரைவாக அணைத்ததால், விமானம் திட்டமிட்டபடி தொடர்ந்தது மற்றும் பாங்காக்கில் உள்ள விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
Getty Images/iStockphoto)
விமானத்திற்கு எந்த சேதமும் ஏற்படாததால், தாய்லாந்து உள்ளூர் காவல்துறையை இந்த விஷயத்தில் ஈடுபடுத்த வேண்டாம் என்று விமானக் குழுவினர் தேர்வு செய்தனர்.
கூடுதல் செய்திகளுக்கு: ராம் குமார், கள்ளக்குறிச்சி மாணவி இறப்புகளுக்கு ஒற்றுமை இருக்கு: வழக்கறிஞர் ராமராஜ் சிறப்பு பேட்டி
ஆனால் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ள அந்த பயணி இஸ்ரேலுக்கு திரும்பியதும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
Getty Images/iStockphoto)