விமான ஓடுபாதையின் அருகில் அமர்ந்து சாப்பிட்ட பயணிகள்! வீடியோ வைரலானதால் சிக்கிய நிறுவனம்
பயணிகள் விமான ஓடுபாதை அருகில் அமர்ந்து சாப்பிட்டதால் மும்பை விமான நிலையத்திற்கும், இண்டிகோ விமான நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடும் பனிமூட்டம்
ஞாயிற்றுக்கிழமை அன்று டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான விமானங்கள் பலமணி நேர தாமதத்திற்கு பிறகே இயக்கப்பட்டன.
குறிப்பாக, டெல்லிக்கு வர இருந்த இண்டிகோ விமானம் ஒன்று மும்பைக்கு திருப்பி விடப்பட்டது. கோவாவில் இருந்து கிளம்பிய விமானம் அவசரமாக மும்பையில் தரையிறங்கியது.
@HardeepSPuri @JM_Scindia @PMOIndia @ABPNews @republic @aajtak @IndiGo6E Flight number 6E
— Anchit Syal (@AnchitSyal) January 14, 2024
2195 from goa to Delhi has been delayed for 20 hrs and now they have landed at Mumbai Airport instead of Delhi. Totally unsafe for women traveller's nocourtesy in indigo staff. pic.twitter.com/3uWiIQ1yjO
அதனைத் தொடர்ந்து கீழே இறக்கிவிடப்பட்ட பயணிகள் என்னசெய்வதென்று அறியாமல் விழித்துள்ளனர்.
விமான நிறுவனம் மீது புகார்
விமானம் புறப்பட்ட சில மணிநேரம் என தெரிய வந்ததால், பயணிகள் அனைவரும் ஓடுபாதை அருகியிலே அமர்ந்து சாப்பிட்டனர்.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகியது. இதனால் விமான நிலையம், விமான நிறுவனம் மீது புகார் எழுந்தது.
இந்த நிலையில், சிவில் விமான பாதுகாப்பு பணியகம் (BCAS) மும்பை விமான நிலையத்திற்கும், இண்டிகோ விமான நிறுவனத்திற்கும் பயணிகள் ஓடுபாதை அருகே அமர்ந்து சாப்பிட்டது குறித்து விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |